Tuesday, November 12, 2013

உயிரியல் - அதிரீனல் மையவிழையம்.

மையத்தில் காணப்படும் பிரதேசம்.
புறத்தோற்படை உற்பத்திக்குரியது.
நரம்புத் திரட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள கலங்கள் - Chromoffin கலங்கள் எனப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்
1. Addrenaline / Epinephrine   - அவசரகால ஓமோன்
2. Noraddrenaline / Norepinephrine - அவசரகால ஓமோன்
3. Doparmin - அவசரகால ஓமோன்

அவசரகால ஓமோன்களின் தொழில்கள்
01. சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
02. இதயதுடிப்பு வேகத்தை அதிகரிக்கச் செய்யும்.
03. சிறுநீர்பையின் சுருக்கத்தைத் தடுக்கும்.
04. சமிபாடு நிகழ்வதை நிரோதிக்கும்.
05. ஈரலில் கிளைக்கோசனிலிருந்து குளுக்கோசின் உருவாக்கத்தைக் 
     கூட்டுதல்.
06. Glucose + O2 -------> CO2+H2O+ATP எனும் தாக்கம் நிகழ்வதைக் கூட்டுதல்.
07. Glucose -------> Lactic Acid + ATP எனும் தாக்கம் நிகழ்வதைக் கூட்டுதல்.
08. நீண்ட என்புகள், வன்கூட்டுத்தசை, இதயம், மூளை ஆகியவற்றுடன் 
     தொடர்புடைய குருதிக் கலன்களை விரிவடையச் செய்தல்.
09. உட்தோலில் உள்ள குருதிக்கலன்களை சுருங்கச் செய்தல்.
10. அவசரம், பதட்டநிலையின்போது அதற்கேற்றவாறு உடலை மாற்றுதல்.
அவசரகால ஓமோன்களின் தொழில்கள் = பரிவு நரம்புத் தொகுதியின் தொழில்கள்.
அவசரகால ஓமோன்கள் Thyrosine எனும் அமினோவமிலத்திலிருந்து தொகுக்கப்படும்.

No comments:

Post a Comment