Tuesday, November 12, 2013

உயிரியல் - அதிரீனல் மேற்பட்டை

வெளிப்புறமானது.
இடைத்தோற்படை உற்பத்திக்குரியது.
அதிரீனல் சுரப்பியின் பெரும்பாகத்தை அமைக்கும்.
மூன்று வளையங்களில் அடுக்கப்பட்ட கலங்களைக் கொண்டுள்ளது.
உயிர்வாழ்வதற்கு அவசியமான பகுதி.
இதன் தொழிற்பாடு முன்கபச்சுரப்பியால் சுரக்கப்படும்.  ACTH ஆல் கட்டுப் படுத்தப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.
i. Mineralo Corticoids - (உ+ம்) : Aldosterone.
ii. Gluco Corticoids - (உ+ம்) : Cortisol, Corti Costerone.
iii. Sex Corticoids - (உ+ம்) : Androgens.
Mineralo Corticoidsஇன் தொழில்கள் 
1. சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்தகுழாயைத் தூண்டி Na+ மீள 
    அகத்துறுஞ்சலைத் தூண்டுதல்.
2. சிறுநீரகத்தியால் K+ அகத்துறுஞ்சப்படுவதைக் குறைத்தல்.
3. Na+, K+ ஆகியவற்றில் சமநிலையைப் பேணுதல்.
4. உமிழ்நீர், வியர்வை, சிறுநீர் ஆகியவற்றுடன் அதிகளவு 
    Na+ வெளியேறுவதைத் தடுத்தல்.
5. உடலில் பிரசாரண அமுக்கத்தை சீராக்கப் பேணுதல்.

Mineralo Corticoids  மிகையாக சுரக்கப்பட்டால்.
1. சிறுநீர் அகத்தியில் Na+ மீள அகத்துறுஞ்சப்படுதல் அதிகரிக்கும் எனவே
    அதிகளவு  Kகுருதியிலிருந்து வெளியேற்றப்படும்.
2. சிறுநீரகத்தியால் அதிகளவு நீர் மீளவகத்துறுஞ்சப்படும்.
3. இதயத்துடிப்பின் சந்தம் குறையும்.
4. குருதியமுக்கம் அதிகரிக்கும்.

Mineralo Corticoids குறைவாகச் சுரக்கப்பட்டால்.
1. சிறுநீகத்தியால் Na+, நீர் ஆகியவை மீளவத்துறுஞ்சப்படுதல் குறையும்.

Gluco Corticoids  இன் தொழில்கள்
தகைப்பு, மனவெழுச்சி, மிகையான குளிர் போன்ற தூண்டல்களால் சுரக்கப்படும்
காபோகைதரேற்றின் அனுசேபத்தைச் சீராக்குதல்.
புரத உடைப்பைத் தூண்டுதல்.
புரதத்திலிருந்து Clucose  உருவாதலைத் தூண்டுதல்.
கொழுப்பனுசேபத்தைத் தூண்டி குருதியில் கொழுப்பமிலத்தின் செறிவை அதிகரிக்கச் செய்தல்.
ஈரலில் Glycogen உருவாவதைத் தூண்டுதல்.
ஒவ்வாமையைக் குறைத்தல் / பிறபொருள் எதிரி உருவாவதைக் குறைத்தல்.
உடல் வீங்குவதைக் குறைத்தல்.
இலைசோசோமின் மென்சவ்வை உறுதியாகபேணுதல்.

Gluco Corticoids மிகையாகக் சுரக்கப்பட்டால்.
1. குருதியில் குளுக்கோசின் செறிவு அதிகரிக்கும்.
2. முகத்தில் அதிகளவு கொழுப்புபடிந்து முகம் சந்திரனின் வடிவத்திற்கு மாறும்     இது Cushing Diesease எனப்படும்.
3. உயர் குருதியமுக்கம் ஏற்படும்.
4. நிரிழிவு ஏற்படும்.
5. மயிர்கள் மிகவேகமாக வளரும்.

Gluco Corticoids குறைவாக சுரக்கப்பட்டால்.
1. தசைகள் பலமிழந்து அடிசன் நோய் (Addison Diesease) உருவாகும்.
2. தாழ் குருதியமுக்கம் ஏற்படும்.
3. தொற்று நோய்க்கான எதிர்புச்சக்தி குறையும்.
4. தோல் சோர்ந்து கறுப்பு நிறமாக மாறும் / மெலனினின் அளவு அதிகரிக்கும்.
5. மாதவிடாய் வட்டம் ஒழுங்கீனமாக நடைபெறும்.
6. மயிர்கள் விரைவாகக் கொட்டிவிடும்.
7. மனக் குழப்பம் ஏற்படும்.
Sex Corticoids தொழில்கள்.
Testesterone எனும் ஓமோன்களுக்கு ஒப்பானது.
1. இலிங்க அங்கங்களின் விருத்தியை தூண்டும்.
2. துணைப்பாலியல்புகளின் விருத்தியைத் தூண்டும்.
3. ஆண்களின் தசைகளில் புரதம் படிதலைத் தூண்டும்.

Sex Corticoids மிகையாக சுரக்கப்பட்டால்.
1. ஆண்களில் இலிங்க முன்முதிர்வு ஏற்படும்.
2. பெண்களில் ஆண்தன்மை உருவாகும் / பெண்கள் ஆண்களாக மாறுவர்.
3. இலிங்க அங்கம் நலிவடையும்.

Sex Corticoids குறைவாகச் சுரக்கப்பட்டால்,
1. உடல் பலமிழக்கும்.
2. சிறுநீரகங்கள் செயலிழக்கும்.

No comments:

Post a Comment