Tuesday, November 12, 2013

உயிரியல் - இலங்ககான் சிறுதீவுகள்

சதையியின் புறஞ்சுரக்கும் கூறுகளுக்கிடையே எழுந்தமானமாக பரவிக் காணப்படும் கோளவடிவான புடகங்கள் / சிறிய கலத்திணிவுகள்.
அதிகளவு குருதிமயிர்த்துளைக் குழாய்களைக் கொண்டது.
ஒவ்வொரு புடகமும் 3 வகையான கலங்களைக் கொண்டிருக்கும் அவையாவன,
1. α Cell…………… Glucagon எனும் ஓமோனைச் சுரக்கும்.
2. β Cell………… Insulin எனும் ஓமோனைச் சுரக்கும்.
3. γ Cell………… Somatostatin எனும் ஓமோனைச் சுரக்கும்.
Insulin  இன் தொழில்கள்
1. குருதியில் உள்ள மேலதிக Glucose ஐ Glycogen ஆக மாற்றுதல்.
2. கலங்களால் Glucose உள்ளெடுக்கப்படும் வீதம், பயன்படுத்தப்படும் வீதம் 
    ஆகியவற்றை அதிகரிக்கச் செய்தல்.
3. Glucose ஐ கொழுப்பமிலம், கொழுப்புப்படிவுகளாக மாற்றுவதைக் தூண்டுதல்.
4. கலங்களிலுள்ள Amino Acid உள்ளெடுக்கப்படுதலை உள்ளெடுக்கச் செய்தல்.
5. புரதத் தொகுப்பு நிகழும் வீதத்தை அதிகரிக்கச் செய்தல் / DNA உற்பத்தியை 
    தூண்டுதல்.

Insulin மிகையாகச் சுரக்கப்பட்டால்.
1. குருதியில் Glucose இன் செறிவு சாதாரண அளவை விட குறைவடையும் 
    இத்தன்மை குறைவெல்ல உண்மை எனப்படும்.
2. பசி ஏற்படும்.
3. வியர்க்கும்.
4. விரைவில் உணர்ச்சிவசப்படுவர்.
5. இரட்டைப் பார்வை ஏற்படும்.
6. தசைச் சுருக்கம் பாதிக்கப்படும்.
7. நரம்புக் கணத்தாக்கம் பாதிக்கப்படும்.

Insulin குறைவாகச் சுரக்கப்பட்டால்
1. குருதியில் Glucose செறிவு அதிகரிக்கும். இத்தன்மை அதிபரவெல்ல உண்மை 
    எனப்படும்.
2. குருதியில் Glucose இன் செறிவு குறித்த அளவை விட அதிகரிக்கும் போது 
   மேலதிக Glucose சிறுநீருடன் வெளியேற்றப்படும். இது வெல்லமுள்ள நீரிழிவு 
    / Diabities Mellitus எனப்படும்.
3. தசையிழையம் உடைக்கப்படும், உடல்நிறை குறைவடையும், களைப்பு 
    ஏற்படும்.
4. பார்வை, கேட்டல் குறைவடையும்.
5. காயங்கள் குணமடையமாட்டாது.

Glucagon இன் தொழில்கள்
1. குருதியில் Glucose மட்டம் குறித்த அளவை விடக்குறைவடையும் போது 
    ஈரலிலுள்ள Glycogen ஐ Glucoseஆகமாற்றும்.
2. புரதம், கொழும்பு ஆகியவற்றிலிருந்து Glucose இன் உருவாக்கத்தை 
    தூண்டுதல்.
3. Lactic Acid ஐ Glucose ஆக மாற்றுதல்.

1. Insulin மிகையாகச் சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு Glucagon குறைவாகச் 
    சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு.
2. Insulin குறைவாகச் சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு Glucagon மிகையாகச் 
   சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு.

No comments:

Post a Comment