Monday, November 11, 2013

உயிரியல் - பரிவகக் கீழ்

மூளையத்தின் அடியில், பரிவகத்திற்கு கீழ், கபச்சுரப்பிக்கு மேலாக அமைந்துள்ளது. கபச்சுரப்பியுடன் நரம்புநார்களாலும், குருதிமயிர்த்துளைக் குழாய்களாலும் இணைக்கப்பட்டள்ளது. ஓமோன்களைச் சுரக்கக்கூடிய நரம்புச் சுரப்பிக் கலங்களை (Neuro Secretory Cells) கொண்டுள்ளது.
தொழில்கள் :-
1) பின்வரும் விடுவிக்கும் ஓமோன்கள், நிரோதிக்கும் ஓமோக்களைச் சுரந்து 
   முன் கபச்சுரப்பியால் ஓமோன்கள் விடுவிக்கப்படுவதை / சுரக்கப்படுதலை 
   கட்டுப்படுத்தும்.
i. GHRH – Growth Hormone Releasing Hormone.
   முன் கபச்சுரப்பியால் புர் சுரக்கப்படுவதை / விடுகிக்கப்படுவதை தூண்டும்.
ii. GHRIH – Growth Hormone Releasing Inhibiting Hormone.
   முன் கபச்சுரப்பியால் புர் விடுவிக்கப்படுவதை நிரோதிக்கும் / தடுக்கும். 
iii. PRH – Prolactin Relewsing Hormone.
   முன் கபச்சுரப்பியால் Prolactin விடுவிக்கப்படுவதை தூண்டும். 
iv. LHRH/GnRH – Luteinising Hormone Releasing Hormone / Gonodotrophin Releasing Hormone. 
    முன் கபச்சுரப்பியால் LH, FSH ஆகியவை சுரக்கப்படுவதை தூண்டும். 
v. TRH – Thyrotrophin Releasing Hormone.
    முன் கபச்சுரப்பியால் TSH விடுவிக்கப்படுவதை தூண்டும். 
vi. CRH – Adreno Corticortrophin Releasing Hormone.
   முன் கபச்சுரப்பியால் ACTH விடுவிக்கப்படுவதை தூண்டும்.
 
2) ADH, Oxytocin ஆகிய ஓமோன்களைச் சுரந்து பின்கபச்சுரப்பிக்கு கடத்துதல்/ 
   அனுப்புதல்.

No comments:

Post a Comment