Monday, November 11, 2013

உயிரியல் - கபச்சுரப்பி

உடலின் மிகப் பிரதான / தலைமை அகஞ்சுரப்பி.
மூளையில் பரிவகக்கீழின் கீழாக, பரிவகக்கீழுடன் சிறுகாம்பல் இணைக்கப்பட்டு ஆட்புரு என்பின் துருக்கிச் சேணத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.
சிறியது / நிலக்கடலையின் பருமன்னுடையது.
0.5 g நிறையுடையது.
சிவப்பு கலந்த நரைநிறமுடையது.
புறத்தோற்படை உற்பத்திக்குரியது.
மெல்லிய தொடுப்பிழைய உறையால் போர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு சோனைகளை கொண்டுள்ளது. இருசோனைகளும் ஒரு பிளவால் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
1. முன்பக்க கபச்சுரப்பி / முன்பக்கச் சோணை.
2. பின்பக்க கபச்சுரப்பி / பின்பக்கச் சோணை / நரம்புக்கீழ் வளரி.

No comments:

Post a Comment