பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.
1. Oestrogen
சூலகத்திலுள்ள புடைப்புக்கலங்களால் அதிகளவு சுரக்கப்படும்.
இவ்வோமன்கள் சுரக்கப்படுதலை FSH தூண்டும்.
தொழில்கள் :-
1. கருப்பையின் அகத்தோலை வளர்த்தல்.
2. கருப்பையின் அகத்தோலில் சுரப்பிகளை உருவாக்குதல்.
3. பெண்களில் துணைப்பாலியல்புகளை தூண்டுதல்.
4. பெண்களில் இலிங்க உணர்வை அதிகரிக்கச் செய்தல்.
5. குருதியில் உயர்செறிவில் காணப்படும் போது பின்னூட்டல் பொறிமுறை
மூலம் GnRH சுரக்கப்படுவதை நிரோதித்தல்.
2. Progestrone
சூலகத்திலுள்ள மஞ்சள் சடலத்தால் சுரக்கப்படும்.
முன்கபச்சுரப்பியால் சுரக்கப்படும் LH ஆனது மஞ்சட் சடலத்தைத் தூண்டி
Progestrone ஐ சுரக்கச் செய்யும்.
தொழில்கள் :
1. முளையம் உட்பதிக்கப்படுவதற்று கருப்பையின் சுரப்பு அவத்தையைப்
பேணல்.
2. கருப்பையின் அகத்தோலால் சுரப்புக்கள் சுரக்கப்படுவதை அதிகரிக்கச்
செய்தல்
3. பெண்களில் இலிங்க உணர்வை அதிகரிக்கச் செய்தல்.
4. குருதியில் உயர்செறிவில் காணப்படும் போது பின்னூட்டல் பொறிமுறை
மூலம் GnRH சுரக்கப்படுவதை நிரோதித்தல்.
3. Relaxin.
1. சூலகத்திலுள்ள மஞ்சள் சடலத்தால் சுரக்கப்படும்.
2. பெண்களில் குழந்தைப் பிறப்பு வேளையில் சுரக்கப்படும்.
3. ஆண்களில் முன்னிற்கு சுரப்பியால் சுரக்கப்படும்.
தொழில்கள் :
1. குழந்தை பிறக்கும் போது பூப்பென்பு ஒட்டைத் தளர்த்தி குழந்தை
இலகுவாக பிறப்பதற்கு உதவுதல்.
2. ஆண்களில் விந்தின் அசைவை இலகுவாக்குதல்.
No comments:
Post a Comment