Monday, November 11, 2013

உயிரியல் - முன்பக்க கபச்சுரப்பி

வாய்க்குழியின் கூரையிலுள்ள வாய்க்கீழுள்ளள வளரியிலிருந்து உருவாக்கப்படும். பரிவகக்கீழுடன் குருதிக்குழாய்களால் இணைக்கப் பட்டுள்ளது.
பரிவகக்கீழில் ஒரு மயிர்துளைக்குழாய்ப் பின்னலையும், முன்பக்க கபச்சுரப்பியில் ஒரு மயிர்த்துளைக் குழாய்ப் பின்னலையும் உருவாக்குவதன் மூலம் ஒரு வாயிநாளத் தொகுதியை கொண்டுள்ளது.
GH, Prolactin, LH, FSH, TSH, ACTH ஆகிய ஆறு வகையான போசனை ஓமோன்களை சுரக்கும். போசணை ஓமோன்கள் சுரக்கப்படுவதை /முன்கபச்சுரப்பியை பரிவகக்கீழில் சுரக்கப்படுகின்ற விடுவிக்கும் ஓமோன்கள், நிரோதிக்கும் ஓமோன்கள் ஆகியவை கட்டுப்படுத்தும்.

போசணை ஓமோன் / திருப்ப ஓமோன் / Trophic Hormone :
வேறு அகஞ்சுரப்பிகளால் ஓமோன்கள் சுரக்கப்படுவதை கட்டுப்படுத்து வதற்காக முன்கபச்சுரப்பியால் சுரக்கப்படும் ஓமோன்கள்.

No comments:

Post a Comment