கதோட்டுக்கதிர்களை திண்ம மூலகங்களுடன் மோதச்செய்யும் போது ஏற்றமற்ற ஆனால் ஊடுருவும் திறன்கூடிய ஒருவிதக்கதிர்கள் வெளியேறுவது அவதானிக்கப்பட்டது. இக்கதிர்கள் X- கதிர்கள் என அழைக்கப்பட்டது.
X- கதிர்களைக் கண்டுபிடித்தவர் R.W.Rontgen அவார்.
வெவ்வேறு மூலகங்களில் இருந்து உருவாக்கப்படும் X- கதிர்களை ஒளிப்படத்தாளில் படச்செய்வதன் மூலம் X- கதிர் நிறமாலைகளைப் பெறலாம். அவற்றிலிருந்து X- கதிர்களின் அதிர்வெண், அலைநீளப் பெறுமானங்கள் கணிக்கப்பட்டு அணுவெண்னைத்துணியும் பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.
X- கதிரின் இயல்புகள்
1. ஊடுருவும் திறன் கூடியது.
2. குறைந்த அலைநீளத்தைக் கொண்டவை.
3. ஏற்றம், திணிவு அற்றவை.
4. மின், காந்த மண்டலங்களில் திரும்பலடையாது.
5. அண்ணளவாக ஒளியின் வேகத்தை உடையது.
6. இது ஒரு மின்காந்த அலையாகும்.
X - கதிரின் பயன்கள்
1. திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மையை அறிதலில் பயன்படுத்தப்படும்.
2. திண்ம சாலகங்களின் கட்டமைப்புக்களை அறிதலில் பயன்படுத்தப்படும்.
3. மூலக்கூறுகளில் உள்ள பிணைப்புக்கோணம், பிணைப்புத்தளம்
போன்றவற்றை அறிதலில் பயன்படுத்தப்படும்.
No comments:
Post a Comment