இந்து மதம் உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றது என்பதனை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்து மதம் மிகவும் தொன்மையான மதம் என்பதனை அறிவதற்கு அம்மதம் தொடர்பாக சான்று பகிர்கின்ற தடயங்களாக இலக்கியங்கள், தொல்பொருட் சான்றுகள் என்பன விளங்குகின்றன.
இந்து மத இலக்கியங்களிலே வரலாற்றுப் பதிவேடுகளாக விளங்கும் வேதம், ஆகமம், இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாத்திரங்கள், உபநிடதங்கள் என பலவகையான இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தொல்பொருள் சான்றுகள் என்னும் போது ஆலயங்கள், அழிவடைந்த கட்டிடங்கள், நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்கள், திருவுருவங்கள் போன்ற பல அம்சங்கள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.
இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்துமதம் உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் முன்னோடியானது என்பதனை “சனாதன தர்ம சாஸ்திரம்” என்னும் நூலில் இந்து மதத்தை “சனாதன தர்மம்” எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்ற மரபு காணப்படுகின்றது.
சனாதன தர்மம் என்பது இந்து மதம் யாரால், எங்கு, எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்ற பொருளை தெரியாத மதம் என்னும் சிறப்பைப் பெற்று விளங்குகின்றது.
இந்து நாகரிக வரலாற்றிலே சைவப் பெரியார்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் என பெரும்தொகையானோர் தோற்றம் பெற்று இந்து மதத்தைக் காத்துவருகின்றனர்.
இந்து மதத்தின் காப்பகங்களாக மடங்கள், ஆதினங்கள், சமாஜங்கள், பீடங்கள், கல்லூரிகள், அறச்சாலைகள் எனப் பல அமைப்புக்கள் உருவாகி பேணிவருகின்ற நிலையும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment