வேதங்களின் வழிபாட்டுக் கொள்கை 3 விடயத்தை அடிப்படையாகக் கொண்டது
1. இயற்கை வாதம்
ஆரம்ப காலத்திலேயே இயற்கை அம்சங்களாக விளங்கிய மலை, நதி, தீ போன்றன தெய்வீக நிலைப்படுத்தப்பட்டு வழிபட்ட மரபே இயற்கை வாதம் எனப்படுகின்றது.
2. பல் இறைவாதம்
இயற்கை அம்சங்கள் வரையறை செய்யப்பட்டு உலக அடிப்படையிலே விண், இடை, மண் என வகுக்கப்பட்டு ஓர் உலகிற்கு 11 தெய்வமெனும் அடிப்படையில் வழிபடப்பட்ட மரபே இதுவாகும். இதில் 33 தெய்வங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆங்கிலத்தில் பொலித்தீசம்(Polithisam) என அழைத்தனர்.
3. ஓர் இறைவாதம்
காலப்போக்கில் பரம்பொருள் ஒன்றே என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கு வேத பாசுரத்தில் கூறப்பட்ட “ஏகம் சத் விப்ரா பௌத்தா பததே” என்ற பாடலடியை அடிப்படையாகக் கொண்டு பிரஜாபதி (பிரஜைகளின் தலைவன்) அல்லதுவிஸ்வகர்மன் (உலகிற்கு வினையாற்றுபவன்) என ஒரு தெய்வத்தை வழிபடும் மரபு காணப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொனித்தீசம்(Monithisam) என அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment