Wednesday, October 23, 2013

வங்கிக் கணக்கு - நிதி நடைமுறைகள்

அரசாங்கத் திணைக்களங்களில் தேவைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளையோ வைத்திருக்க முடியும். நிதிப் பிரமாணம் 380 இன் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியிலோ அல்லது வேறு அரசாங்க வங்கியிலோ கணக்கு வைக்கும் அதிகாரம் திறைசேரிப் பிரதிச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அரசாங்கத் திணைக்களம் ஒன்றிற்கான வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறைசேரியின் பிரதிச் செயலாளரின் அனுமதி பெறப்படல் வேண்டும். மகாண சபைகளைப் பொறுத்த வரையில் 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் பிரகாரம் அவ்வவ் மாகாண சபைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும

No comments:

Post a Comment