Monday, October 21, 2013

இந்துநாகரிகம் - வேத இலக்கியங்கள்

இந்து மதத்தின் முதல் இலக்கியமாகவும், காலத்தால் முற்பட்டும், இறை நூலாகவும் விளங்குவது வேதம் ஆகும். இது பொது நூலாகவும் அழைக்கப்படுகின்றது. இது கி.மு 1500 - 600 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தோற்றம் பெற்றது. எனவே இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றதெனலாம்.
பொருள்
வேதம் “அறிவு” எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது “வித்” என்னும் அடியைக் கொண்டது எனவும் இது வித்தைகளுடன் கூடியது எனவும் ஆதலால் அறிவு எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

மறு பெயர்கள்
1. சுருதி :- வாய் வழியாகப் பாடி செவி வழியாக கேட்கப்பட்டது.
2. எழுதாமறை / எழுதாக்கிளவி :- ஏட்டில் எழுதப்படாதது
3.அபரூஷையம் :- மனிதர்களால் உருவாக்கப்படாது இறைவனால் 
   உருவாக்கப்பட்டது.
4. மறை :- மறை பொருள் கோட்பாட்டை விளக்குவது.
5. ஆம்நயம் :- தொன்றுதொட்டு வந்த அறிவு
6. சதுர்மறை :- நான்கு வேதம்

No comments:

Post a Comment