Wednesday, October 23, 2013

வங்கிக் கணக்கு ஆரம்பித்தல் - நிதி நடைமுறைகள்

பிரதான கணக்கு பொறுப்பு உத்தியோகத்தர் ஒருவரால் நிதிப்பிரமாணம் 381 இன் பிரகாரம் பின்வரும் விபரங்களை புதிய வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்காக திறைசேரிப் பிரதிச் செயலாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
1. கணக்கு ஆரம்பிக்கவிருக்கும் வங்கியின் பெயரும் அதன் கிளை 
    அமைந்துள்ள இடமும்
2. கணக்கின் பெயர்
3. அக்கணக்கை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களின் பெயர், பதவிப்பெயர் 
    போன்ற வேறு விபரங்கள்
குறிப்பிட்ட கணக்கின் பொருட்டு எழுதப்படும் காசோலைக்கு கையொப்பம் இட அனுமதிக்கும் உத்தியோகத்தர் பெயர், பதவிப் பெயர் மற்றும் அவரின் மாதிரிக் கையொப்பம் திறைசேரிப் பிரதம செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்டு வங்கிக்கு அனுப்புவதற்காக அனுப்புதல் வேண்டும். மற்றம் வங்கிக் கணக்கிற்கு எழுதப்படும் எல்லா காசோலைகளுக்கும் கெயொப்பம் இட அனுமதி வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் மாதிரிக் கையொப்பம் திணைக்களத் தலைவரால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இது தவிர காசோலையில் கையொப்பமிடும் உத்தியோகத்தர்கள் யாவரும் பிணை வைத்தல் வேண்டும்.

உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் மாதிரிக் கையொப்பப் பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டி ஏற்படும் போது திணைக்களத் தலைவர் அம்மாதிரிக் கையொப்பத்தை உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும். வேறு சந்தர்ப்பத்தில் புதிய ஒருவரை நியமிக்க வேண்டி ஏற்படின் திறைசேரியின் பிரதிச் செயலாளரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும்.

திணைக்களத் தலைவர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் பிரதான கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தர் புதிதாக வந்த திணைக்களத் தலைவரின் மாதிரிக் கையொப்பத்தை உறுதிப்படுத்தி அவரின் நியமனக் கடிதத்தின் பிரதியுடன் திறைசேரிப் பிரதிச் செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும். திறைசேரிப் பிரதிச் செயலாளர் அதை உறுதிப்படுத்தி உரிய வங்கிக்கு அனுப்பி வைப்பார்.

தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் போன்று இக்கணக்கிற்கும் பணம் வைப்புச் செய்து கணக்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.

No comments:

Post a Comment