Tuesday, July 2, 2013

அலைகள் - Waves

ஒலி அலைகளின் ஊடுகடத்தல்
ஒலி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம் செய்வதே ஒலி ஊடுகடத்தல் என அழைக்கப்படும்.
ஒலி ஊடுகடத்தப்படுவதற்கு ஊடகம் அவசியமாகும். எனவே ஒலி வெற்றிடத்தினூடாக கடத்தப்படமாட்டாது. அத்துடன் ஒலி அலை நெட்டாங்கு அலைவடிவில் கடத்தப்படும்.

ஒலியலை கடத்தப்படுவதற்கு ஊடகம் அவசியம் எனக் காட்டல்

படத்தில் காட்டியவாறு உபகரணத்தை அமைக்குக. பின்னர் வெற்றிடமாக்கும் பம்பியை தொழிற்பட வைக்கும் முன்பாக மின்மணியை இயக்குக. இப்பொழுது மின்மணியின் ஒலியைக் கேட்கமுடியும். பின்னர் வெற்றிடமாக்கும் பம்பியை தொழிற்பட வைத்து மணிச்சாடியில் உள்ள வளியை வெளியேற்றுக. இதன்போது மின்மணியின் ஒலி படிப்படியாகக் குறைந்து பின் முற்றாகக் கேட்காது. இறுதியாக வெற்றிடாக்கும் பம்பியை அகற்றி மணிச்சாடியிள் வளியைச் செல்ல விடும்போது மீண்டும் மணியொலியைக் கேட்கமுடியும். எனவே ஒலியலை கடத்தப்படுவதற்கு ஊடகம் அவசியம் எனக் உறுதிப்படுத்தலாம்.

ஊடகத்திற்கு ஊடகம் ஒலியின் கதி மாறுபடும்.
வளியில் ஒலியின் கதி 330 ms-1
நீரில் ஒலியின் கதி 1461 ms-1
உருக்கில் ஒலியின் கதி 5600 ms-1

No comments:

Post a Comment