X கதிர்கள்;(X-Rays)
வேகமாக இயங்கும் இலத்திரன்களை திணிவு கூடிய மூலகங்களுடன் மோதச்செய்யும் போது X கதிர்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக திணிவு கூடிய மூலகமாக தங்குதன்(W) உடயோகிக்கப்படுகின்றது. இவை மிக உயர்ந்த அதிர்வெண்ணையும்> சக்தியையும் கொண்டவை. அத்துடன் உடலை ஊடுருவிச் செல்லும் ஆற்றல் கொண்டவை.
X கதிர்களின் அனுகூலங்கள்
1. X கதிர்ப்படங்களை எடுப்பதற்கு உதவுகின்றது.
2. உலோக இணைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய உதவுகின்றது.
3. அணுக்களில் உபஅணுத்துணிக்கைகளின் பரம்பலைக் கண்டறிவதற்கு
உதவுகின்றது.
X கதிர்களின் பிரதிகூலங்கள்
1. X கதிர்கள் பரம்பரையலகு விகாரத்தை ஏற்படுத்தி புற்றுநோயை ஏற்படுத்தக்
கூடியன.
No comments:
Post a Comment