Monday, July 1, 2013

அலைகள் - Waves

கழியூதாக்கதிர்கள்/ புறவூதாக்கதிர்கள்(Ultra -Violet Rays)
சூரிய ஒளிலிருந்து பிறப்பிக்கப்படும் கதிர்ப்பில் புறவூதாக்கதிர்களும் அடங்கியுள்ளன. இவை புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படையினால் அகத்துறிஞ்சப்படுவதால் புவியில் வாழும் அங்கிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது தடுக்கப்படுகின்றது.

கழியூதாக்கதிர்களின் அனுகூலங்கள்
1. தோலினால் விற்றமின் D தொகுக்கப்படுவதற்கு உதவுகின்றது.
2. தோலின் நிறமாற்றத்திற்கு காரணமாக அமைகின்றது.
3. நிறப்பூச்சுக்களில் அடங்கியுள்ள புளோரொளிர்வுச் சேர்வைகளின் 
    கவர்ச்சிகரமான மினுமினுப்புக்கு காரணமாக அமைகின்றது.
4. புளோரொளிர்வு மின் விளக்குகளின் பிரகாசமான ஒளிர்வுக்கு காரணமாக 
    அமைகின்றது.
5. போலி நாணயத்தாள்களை கண்டுபிடிப்பதற்கு உதவுகின்றது.
6. பொருட்களில் ஏற்படும் வெடிப்புக்கள், கீறல்களைக் கண்டறிவதற்கு 
    உதவுகின்றது.
7. ஆடைகளுக்கு மேலும் வெண்மையைத் தரும் சலவைத்தூள்களில் 
    காணப்படும் புளோரொளிர்வுச் சேர்வைகள் கழியூதாக்கதிர்களை 
    உறிஞ்சுவதால் மேலதீக வெண்மை கிடைக்கின்றது.
கழியூதாக்கதிர்களின் பிரதிகூலங்கள்
1. கண்ணின் விழித்திரையைப் பாதிப்படையச் செய்கின்றது.
2. தோல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது.

No comments:

Post a Comment