Tuesday, July 2, 2013

அலைகள் - Waves

எதிரொலி(Echo)

கற்பாறைத் தொடர்களுக்கிடையிலோ அல்லது மலையடிவாரத்திலோ சென்று சிறிது தொலைவில் நின்று கொண்டு கூக்குரலிடும்போது சிறிது நேரத்தின் பின் ஆரம்ப ஒலியையொத்த அதேயொலி தோன்றும் இதுவே எதிரொலி என அழைக்கப்படும்.

எதிரொலி ஏற்படுவதற்குக் காரணம் ஒலியானது ஒரு தடங்கலில் பட்டுத் தெறிப்படைந்து எமது காதினை வந்தடைவதே காரணமாகும்.

எம்மால் உணரப்படும் ஒலி எமது காதினுள் 1/10 செக்கன்கள் நிலைத்திருக்கும். எனவே எதிரொலி ஒன்றினைக் கேட்பதற்கு ஆரம்ப ஒலிக்கும் அதன் எதிரொலிக்கும் இடைப்பட்ட நேரம்  செக்கன்களாக இருத்தல் வேண்டும்.

தெறிப்பொலித்தல்(Reveberation)
ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒலி மறைவதற்கு முன்னதாக அதனுடைய தெறிப்பொலி எமது காதினை வந்தடையுமாயின் ஒரே ஒலி காதினுள் நீண்டநேரம் நிலைத்திருப்பது போன்று தோன்றும். இது தெறிப்பொலித்தல் எனப்படும்.

இத் தெறிப்பொலித்தல் செயற்பாட்டை குறைப்பதற்காக கேட்போர் கூடங்கள், திரையரங்குகளில் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன்.

1. உட்புறச் சுவரின் மேற்பரப்பு கரடுமுரடாக அமைக்கப்பட்டிருத்தல்.
2. உட்புறச் சுவரைச் சூழ கம்பளியினால் ஆக்கப்பட்ட திரைகள்
    பொருத்தப்பட்டிருத்தல.
3. சுவரை அமைக்கும் போது சுவர்களுக்கிடையில் பஞ்சு, மரத்தூள் போன்ற
    ஒலி உறிஞ்சும் பதார்த்தங்கள் இடப்பட்டிருத்தல்.

எதிரொலியின் பயன்பாடுகள்
1. கடற்படுக்கைகளின் ஆளங்களைக் கண்டறிவதற்கு
2. கடலில் அமிழ்ந்த கப்பல்களின் சிதைவடைந்த பகுதிகளைக் கண்டறிவதற்கு
3. கடலில் எண்ணெய்ப் படிவுகளை அறிந்து கொள்வதற்கு
4. மீன் கூட்டங்கள் அதிகமுள்ள இடங்களைக் கண்டறிவதற்கு
5. நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் காணப்படும் கற்பாறைகள், தடைகளிலிருந்து
    தப்பிச் செல்வதற்கு.

நீரின் ஆழத்தினை அறிவதற்கு எதிரொலிமானி/ஆழமறிமானி (Ecosounder) பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் மேற்கூறப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.  


No comments:

Post a Comment