1.இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது(1949 இல்) பலநோக்கு
அபிவிருத்தித் திட்டமாகும்.
2. மத்திய மலை நாட்டின் கிழக்குச் சரிவில் மடுள்சீமைக் குன்றில்
உற்பத்தியாகி அக்கரைப்பற்றுக்கு அண்மையில் கடலுடன் கலக்கிறது.
3. இங்கினியாகலையில் 1200 மீற்றர் நீளமுள்ள அணை கட்டப்பட்டு 78 சதுர
கிலோமீற்றர் பரப்பில் சேனாநாயக்கா சமுத்திர நீர்த்தேக்கம்
உருவாக்கப்பட்டது.
4. கல்லோயாத்திட்டம் மூலம் ஏறக்குறைய 50,000 ஹெக்டேயர் நிலம்
நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. இத்திட்டத்திற்கு முன்னர் 10,500
ஹெக்டேயர் பயிர்ச்செய்கை நடைபெற்றது.
5. கல்லோயா பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதிகள் கழிமுகத்தை அண்மித்த
வயல்கள் இத்திட்டம் ஆரம்பிக்க முன்னர் வெள்ளப் பெருக்குகளுக்க
அடிக்கடி உள்ளாகின. புதிய நீர்ப்பாசன முறையால் இவை தடுக்கப்பட்டன.
6. இங்கினியாகலை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 75 இலட்சம் கிலோ
வாட் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
7. நன்னீர் மீன் வளர்த்தல், சீனி ஆலை, மதுபானம் வடித்தல், செங்கல், ஓட்டுத்
தொழிற்சாலைகள், சவர்க்காரத் தொழிற்சாலை போன்ற பல நோக்குத்
திட்டங்களை இத்திட்டம் நிறைவு செய்கிறது.
No comments:
Post a Comment