Monday, November 11, 2013

உயிரியல் - ஓமோன் (Hormone)

அகஞ்சுரக்கும் சுரப்பிகளால் / கலங்களால் / இழையங்களால் சுரக்கப்பட்டு குருதி / நிணநீரினுள் நேரடியாக விடுவிக்கப்படும் விஷேட இரசாயனச் செய்தி காவி.
சுரக்கப்படும் இடத்திலிருந்து அதே அங்கியினுள் தொழிற்படவேண்டிய இழையம் / அங்கத்திற்கு குருதி / நிணநீரினூடாகச் சென்று தொழிற்படும்.
தொழிற்படவேண்டிய இடங்களில் மிகச் குறைந்த செறிவில் தொழிற்பட்டு அவ்விடத்தில் கட்டமைப்பு, தொழிற்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தும்.
மூலக்கூற்று நிறை குறைந்தவை.
கரையக்கூடியவை
இரசாயன இயைபாக்கத்தை நிகழ்த்துபவை.
தொழில் முடிவடைந்ததும் மந்த கதியில் அல்லது விரைவாக ஈரலில் அழிக்கப்படும்.
இரசாயன ரீதியில் பலவகைப்படும் அவையாவன,
1) Polypeptide / Protein வகை : GH, Oxytoicn, ADH, Parathormone, Calcitonin, Insulin, Glucagon, 
    Gastrin, Secretin.
2) Amines வகை: Adrenaline
    Noradrenaline
    Thyroxine (T4)
    Tri iodo thyronine (T3) 
    Releasing hormones – விடுவிக்கும் ஓமோன்கள்
    Inhibiting hormones – நிரோதிக்கும் ஓமோன்கள்
    FSH, LH, Prolactin, TSH, ACTH.
3) Steroids வகை : Testesterone, Oestrogen, Progestrone, Corticosteroids.
4) Fatty acid : Prostoglandins.
ஓமோன்கள் தொழிற்படும் இடங்கள்.
1. கலத்தின் முதலுருமென்சவ்வில் :- ஊடுபுகவிடும் தன்மையைக் 
    கட்டுப்படுத்துவதற்கு.
2. முதலுருமென்சவ்விலுள்ள நொதியங்களில் :- நொதியங்களின் 
    தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு.
3. பரம்பரையலகில் (Gene)  : புரதத்தொகுப்பை கட்டுப்படுத்துவதற்கு.


No comments:

Post a Comment