ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பொஸ்போரஸ் நீரிணைக்கு கீழாக சுரங்க புகையிரதப் பாதை துருக்கியில் 29.10.2013 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுப் பிரதமர் றிசெப் தாயிப் எர்டோகனின் ஊக்கத்தினால் இப்புகையிரதப் பாதையின் நிர்மாணப் பணிகள் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அகழ்வு வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன.
இதன் நீளம் 1.4 கிலோமீற்றர்கள் ஆகும். இதன் மூலம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்திட்டத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதில் 1 பில்லியன் டொலர் நிதியுதவியை ஜப்பான் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment