Monday, November 25, 2013

உயிரியல் - உயிர்ப்பல்வகைமை

சூழற்தொகுதிப் பல்வகைமை
சூழற்தொகுதியில் காணப்படும் பல்வேறுவகையான வாழிடங்களையும், சூழற்தொகுதிகளின் ஆட்சியான அம்சங்களையும் ஒன்று சேர்த்து சூழற்தொகுதிப் பல்வகைமை எனப்படும்.

சூழற்தொகுதி
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட/ இடைத்தாக்கத்தில் ஈடுபடுகின்ற உயிருள்ள, உயிரற்ற கூறுகளைக் கொண்ட அடையாளப்படுத்தக்கூடிய இயங்கும் கட்டமைப்பு.

சூழற்தொகுதி இரு கூறுகளைக் கொண்டது.
1. உயிருள்ள கூறு
  1. உற்பத்தியாக்கிகள்
  2. நுகரிகள்
  3. பிரிகையாக்கிகள்

2. உயிரற்ற கூறு
  1. மண்
  2. ஒளி
  3. நீர்/ ஈரழிப்பு
  4. வெப்பநிலை
  5. வளி/ வளிமண்டலம்
  6. சேதனக் கழிவுகள்

சூழற்தொகுதிகள் பலவகைப்படும்.

1. பெரிய சூழற்தொகுதி - சமுத்திரம், காடு
2. சிறிய சூழற்தொகுதி - மீன் தொட்டி, உக்கும் மரக்குற்றி, பெரிய விருட்சம்
3. எளிய சூழற்தொகுதி - மீன் தொட்டி, உக்கும் மரக்குற்றி, பெரிய விருட்சம்
4. சிக்கலான சூழற்தொகுதி - சமுத்திரம், காடு, பாறைக்கடற்கரை

இலங்கையில் உள்ள அதிகளவு உயிர்ப்பல்வகைமையுடைய சில சூழற் தொகுதிகள்
சிங்கராஜ வனம்
மகாவலி கங்கை
இலங்கையைச் சூழவுள்ள சமுத்திரம்
விக்டோரியா நீர்த்தேக்கம்
யால சரணாலயம்
ஒவ்வொரு சூழற்தொகுதியும் அவற்றுக்கென உயிரியல் அல்லது பௌதீகக் காரணிகளை ஆட்சியான இயல்பாகக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு சூழற்தொகுதியும் பல்வேறுவகையான வாழிடங்களையும், நுண் வாழிடங்களையும் கொண்டிருக்கும்.

வாழிடம் :-சூழற்தொகுதி ஒன்றில் இயற்கையாக அங்கி காணப்படும் இடமாகும்.

நுண் வாழிடம் :- வாழிடம் ஒன்றில் உயிரங்கி குறிப்பாக வாழும் இடமாகும்.

Eg:- நன்னீர்க் குளத்தில் உள்ள ஒரு தாவர இலையின் மீது ஒரு வண்டு காணப்படும் எனின்.
வாழிடம் - தரை
நுண்வாழிடம் - தாவர இலையின் மேற்பரப்பு

No comments:

Post a Comment