Monday, November 11, 2013

உயிரியல் - கேடயப் போலிச் சுரப்பி

கழுத்துப் பகுதியில் குரல்வளை, வாதநாளி ஆகியவற்றுக்கு முன்னாலும், பக்கங்களிலும் சிறகு வடிவில் அமைந்துள்ளது.
கூம்பு/முக்கோணவடிவான இரு சோணைகளை கொண்டது. இரு சோணைகளும் குரல்வளையிலன் முன்புறத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.
அகத்தோற்படை உற்பத்திக்குரியது.
மண்ணிறம் கலந்த செந்நிறமுடையது.
நாரிழைய உறையால் போர்த்தப்பட்டுள்ளது.
இதன் தொழிற்பாட்டை TSH கட்டுப்படுத்தும்.
இச்சுரப்பி ஓமோன்களை சுரப்பதற்கு I2 அவசியம்'
குருதியிலுள்ள I2 வை அகத்துறுஞ்சி I ஆக மாற்றும் திறனுடையது.
குருதிக் கலன் செறிந்தது.
உட்புறமாக குவளை வடிவான புடகங்களை கொண்டுள்ளது.
புடகங்களின் சுவர் செவ்வகத் திண்ம மேலணியால் ஆக்கப்பட்டுள்ளது.
புடகங்களினுள் தடித்த, ஓட்டக்கூடிய Jelly தன்மையான, கட்டமைப்பற்ற புரதங்கள் (Colloid Protein) காணப்படும்.
Thyroid ஓமோன்கள் Colloid புரதங்களுடன் இணைந்து Thyroglobulin வடிவில் புடங்களினுள் சேமிக்கப்படும். புடங்களுக்கிடையே C கலங்கள் காணப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.
i. Thyroxinc (T4)     - Thyroid Hormones
ii. Tri Iodo Thyronine (T3)        - Thyroid Hormones
iii. Calcitonin – C கலங்களால் சுரக்கப்படும்.

தைரொயிட் ஓமோன்களின் தொழில்கள்.
1. உடலின் அனுசேப வீதத்தை சீர்செய்தல்.
2. O2 வின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தல்.
3. இழைமணியின் உற்பத்தியை தூண்டுதல்.
4. ATP யின் தொகுப்பைத் தூண்டுதல்.
5. சுவாசத்தில் பங்குகொள்ளும் நொதியங்களைச் சீர்செய்தல்.
6. புரத உடைப்பை தூண்டுதல்.
7. GH உடன் சோர்ந்து என்பிழையங்களின் வளர்ச்சியைத் தூண்டுதல்.
8. RBC யில் Oxy Haemoglobin இன் பிரிகையைத் தூண்டுதல்.
9. மூளையின் விருத்தியைத் தூண்டுதல்.
தைரொயிட் ஓமோன்கள் அதிகளவு சுரக்கப்பட்டால்,
Hyper Thyrodism ஏற்படும் இதன்போது,
1. அனுசேப வீதம் அதிகரிக்கும்.
2. புரத உடைப்பு அதிகரிக்கும்.
3. உடல் மெலிவடையும்.
4. உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.
5. நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
6. விரைவில் உணர்ச்சி வசப்படுவர்.
7. அமைதியின்மை ஏற்படும்.
8. தைரொயிட் சுரப்பி வீக்கமடைந்து கழலை (Goitre) தோன்றும்.
9. கண்ணுக்குப் பின்னால் கலத்திடைப்பாயி தேங்கி கட்கோளங்கள்
    வெளிதள்ளப்படும். இத்தன்மை விழி வெளிக்கண்டமாலை எனப்படும்.

தைரொயிட் ஓமோன்கள் குறைவாகச் சுரக்கப்பட்டால்.
1. சிறுவர்களில் குறண்மை / கறாளை நிலை ஏற்படும்.
2. சீரற்ற வளர்ச்சி, உளரீதியான பாதிப்புக்கள் ஏற்படும்.
3. வளர்ந்தோரில் Hypothyrodism உருவாகும்.
    இதனால்,
1. அனுசேபவீதம் குறையும்.
2. பருத்த உடல் தோன்றும்.
3. மூளை, உடல் ஆகியவற்றின் தொழிற்பாடு குறையும்.
4. சீதவீக்கம் (Myxodema) ஏற்படும்.
5. சோம்பல் அதிகரிக்கும்.
6. குருதியமுக்கம் அதிகரிக்கும்.
7. உடல் வெப்பநிலை குறைவடையும்.
8. முகத்திலுள்ள இழையங்கள் வீங்கிக் காணப்படும்.

Calcitonin
என்பு, சிறுநீரகம் ஆகியவற்றில் தொழிற்படும்.
குருதியில் Ca2+ இன் செறிவை சீராக பேணுவதற்கு உதவும்.

• குறைவாகச் சுரக்கப்பட்டால் - என்பு உடைந்து அதிலுள்ள Ca2+
                                                                        குருதிக்குள் செல்லும் எனவே குருதியில்
                                                                        Ca2+ இன் செறிவு அதிகரிக்கும்.
• அதிகளவு சுரக்கப்பட்டால் -         குருதியிலுள்ள Ca2+ என்பில் படியும்
                                                                        எனவே குருதியில் Ca2+ இன் செறிவு
                                                                        குறைவடையும்.

No comments:

Post a Comment