Thursday, October 10, 2013

நியூக்கிளைட்டு (Nuclide)

குறித்த எண்ணிக்கையான புரோத்தன்களையும், குறித்த எண்ணிக்கையான நியூத்திரன்களையும் கொண்ட அணுவொன்று, அயனொன்று, கருவொன்று அல்லது சேர்வையிலான அணுவொன்று (Atom in Combinational) நியூக்கிளைட்டு எனப்படும்.

நியூக்கிளைட்டின் வகைகள்
1. இயற்கையாக நிலவும் நிலையான நியூக்கிளைட்டுக்கள் 
2. இயற்கையில் நிலவும் உறுதி நிலையற்ற (கதிர்த் தொழிற்பாடுடைய) 
    நியூக்கிளைட்டுக்கள்
3. செயற்கையான கதிர்த் தொழிற்பாடுடைய நியூக்கிளைட்டுக்கள்

கதிர்த்தொழிற்பாடு (Radio Activity)
1895 ஆம் ஆண்டில் பேராசிரியர் “கென்றி பேக்ரல்” (Henrey Bequral) யுரேனியச் சேர்வைகளில் ஏனைய மூலகங்களின் சேர்வைகளில் இல்லாத பிரத்தியோக இயல்பு உண்டெனக் கவனித்தார். இச்சேர்வைகளை ஒளிப்படத்தாள்களைக் கொண்ட இருட்டறை ஒன்றின் அருகே வைத்தபோது அவை தாக்கப்பட்டி ருப்பதை அவதானித்தே கதிர்த் தொழிற்பாட்டைக் கண்டறிந்தார்.  
கருவின் உறுதிநிலை கருதி, உறுதி நிலையற்ற கருக்கள் மூலம் அல்லது துணிக்கைகள் மூலம் கதிர்ப்பை வெளிவிடல் கதிர்த் தொழிற்பாடு எனப்படும்.

No comments:

Post a Comment