கதிர்த்தொழிற்பாடுள்ள மூலகங்களிலிருந்து மூன்று வகையான கதிர்வீசல்கள் நிகழ்கின்றன. கதிர்த்தொழிற்பாட்டினால் ஏற்படும் கதிர்களை மின்மண்டலத்திற்கூடாகச் செலுத்தும்பொழுது மூன்று வகைக் கதிர்களையும் காணலாம்.
1. α கதிர்கள் (துகள்கள்)
2. β கதிர்கள் (துகள்கள்)
3. γ கதிர்கள் (துகள்கள்)
இந்நிகழ்வின்போது திணிவு குறைக்கப்படுவதனால் இத்தோற்றப்பாடு கதிர்த்தொழிற்பாட்டுத் தேய்வு எனப்படும்.
α கதிர்கள் (துகள்கள்)( α4+2)
இவை நேர்மின்னேற்றமுள்ள துகள்களைக் கொண்டுள்ளவை எனவே மின்மண்டலத்தில் எதிர் ஏற்றமுள்ள தகட்டின் பக்கமாகக் கவரப்படுகிறது.
α கதிர்கள் He இன் அணுக்கருவை or He இன் அயனை ஒத்தவை. α4+2
α கதிர்களின் இயல்புகள்
1. ஒப்பீட்டளவில் γ, β கதிர்களை விட வேகம் குறைந்தவை.
2. α கதிர்கள் வாயு மூலக்கூறுகளுடன் மோதும்பொழுது வாயுக்களின்
இலத்திரன்களை எடுத்துக்கொள்வதினால் மூலக்கூறுகளை
அயனாக்குகின்றன.
3. இவை பருமனில் கூடியதாகவுள்ளதால் திண்மப்பதார்த்தங்களினூடாக
ஊடுருவிச்செல்லும் இயல்பு அற்றவை.
4. இவற்றிலுள்ள கூடுதலான இயக்கப்பண்புச் சக்தியே α கதிர்கள் ZnS திரையில் புளொரொளிர்வு ஏற்படுவதற்குக் காரணமாகும்.
β கதிர்கள் (துகள்கள்)
மின்மண்டலத்தில் நேர்மின்னேற்றமுள்ள தகட்டின் பக்கமாகக் கவரப்படுவதால், இவை எதிர் ஏற்றம் கொண்டுள்ளவை என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இத்துகள்களின் (e/m) விகிதம் கதோட்டுக்கதிர்களின் (e/m) விகிதத்திற்கு சமமாகவுள்ளதால் இவை இலத்திரன்களாகும்.
β கதிர்கள் இலத்திரனை e0-1 ஒத்தவை
β கதிர்களின் இயல்புகள்
1. α, γ ஆகிய இரு கதிர்களுக்கும் இடைப்பட்ட வேகம் கொண்டவை.
2. குறைவான இயக்கப்பண்புச் சக்தியுள்ளதனால் ZnS திரையில் மிகக்குறைந்த அளவில் புளொரொளிர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
3. α கதிர்களை விட கூடுதலான ஊடுருவும் திறனும் γ கதிர்களை விடக்
குறைவான ஊடுருவும் திறனும் கொண்டவை.
4. α துகள்களிலும் கூடுதலான ஒளிப்படவிளைவை இவை தருகின்றன.
ஏனெனில் இவை பிறபதார்த்தங்களில் மோதும்பொழுது X - கதிர்களை
உண்டாக்குகின்றன. X - கதிர்கள் ஒளிப்படவிளைவைத் தருகின்றன.
γ கதிர்கள் (துகள்கள்)( γ00)
மின்மண்டலத்தில் ஒருவித திசைமாற்றமும் இல்லாது காணப்படுவது. இவை மின்னேற்றமற்ற நடுநிலையான துகள்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. ஒளி அலைகளை ஒத்ததும் ஆனால் அலைநீளம் குறைந்தும் காணப்படும். எனவே மின்காந்தக் கதிர்வீசல்களின் தன்மையை இவை கொண்டுள்ளன.
γ கதிர்களின் இயல்புகள்
1. ஒளியின் வேகத்துடன் இவை செல்லும்.
2. இவை வாயுக்களை ஏனைய துகள்களைப்போன்று அயனாக்குவதில்லை.
எனவே இவை பலம் குறைந்த அயனாக்கிகள்.
3. மெல்லிய யுட தகடுகளுக்கூடாக ஊடுருவிச் செல்லக்கூடியவை. ஆனால்
தடித்த Pb அல்லது கொன்கிறீற்று ஆகியவை இவற்றைத் தடுக்கும்.
4. இவற்றின் கூடுதலான ஊடுருவல் இயல்பு இவை உயர்ந்த சக்தியுள்ள X -
கதிர்கள் போன்ற தன்மையினாலாகும்.

குறிப்பு:-
α ,γ, β ஆகிய மூன்று கதிர்களும் ஒரே சந்தர்ப்பத்தில் காலப்படுவது கிடையாது.

No comments:
Post a Comment