Thursday, October 10, 2013

மின்காந்தக் கதிர்ப்புக்கள்

ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு சக்தி இடம்பெயரும் முறை கதிர்ப்பு எனப்படும். அத்துடன் ஒரு ஊடகத்தினூடாகக் கதிர்ப்பு நிகழும்போது அலைவடிவத்தில் தான் செல்கின்றது. இவ்வலைகள் மின்இயல்பு, காந்த இயல்பு என்பவற்றைக் கொண்டிருப்பதனால் இவை “மின்காந்தக் கதிர்ப்பு க்கள்” எனப்படும்.
இக்கதிர்ப்புக்கள் அவற்றின் அலைநீளம்(λ) அல்லது அதிர்வெண்(υ) என்பவற்றைப் பொறுத்து வேறுபடுத்தப்படலாம். λ, υ என்பவற்றுக்கிடையிலான தொடர்பு c =υ λ எனும் சமன்பாட்டினால் தரப்படும். (c - மின்காந்த அலையொன்றின் வேகம்)

இம்மின்காந்தக் கதிர்ப்புக்களினுடைய மீடிறனின் (υ)  ஏறுவரிசையின் படி வெவ்வேறு அலைநீளங்களாகப் வரிசைப்படுத்தி பகுத்துப் பெறப்படும் நிறமாலை “மின்காந்த நிறமாலை” எனப்படும். 
இதற்குப் பயன்படும் கருவி “நிறமாலைமானி” (Spectrometer) ஆகும்.

சில கதிர்ப்புக்களும் அவற்றின் அலைநீளங்கள்
ஒவ்வொரு மின்காந்தக் கதிர்ப்புக்களும் அவற்றின் சக்தியைக்(E) கொண்டு வேறுபடுத்தப்படுகின்றது. மேலும் அதிர்வெண்(υ) உடன் பின்வரும் தொடர்பின் மூலம் தொடர்புபடுத்தப்படுகின்றது.


மின்காந்த நிறமாலையின் பல்வேறு வீச்சுக்களைச் சேர்ந்த கதிர்களின் பயன்கள்
1. γ- கதிர்
   புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படும்.

2. X- கதிர்
    X- கதிர் நிழற்படமெடுத்தல், பளிங்குகளின் கட்டமைப்புக்களைக் கற்றல்   
   போன்றவற்றுக்கு உதவும்.

3. UV- கதிர் (புறவூதாக்கதிர்)
   நுண்கிருமிகளை அழித்தல், பணநோட்டுக்களிலுள்ள இரகசிய குறியீடுகளை    வாசித்தல் போன்றவற்றிக்கு பயன்படும். நிறமாலை பகுத்தாய்வுகளுக்குப்   
   பயன்படும்.

4. பார்வை அலை(Visible Waves)
    பார்வை, நிழற்படம் ஆகியவற்றுக்கு இவ்வீச்சிலுள்ள அலைகள் பயன்படும்.       நிறமாலைமானி பகுத்தாய்வுகளின் போது பயன்படுத்தப்படும்.

5. செந்நிறக்கீழக்கதிர்கள் (Infra Red Rays)
    பௌதீக சிகிச்சை பரிகார செயற்பாடுகளின்(Physiotherapy) போது பயன்படும்.     
    தொலைக்கட்டுப்பாட்டு சமிஞ்சைகளை வெளிவிடும் போதும், நிறமாலை   
    முறைகள் மூலம் நடைபெறும் பகுத்தாயும் செயற்பாடுகளுக்கும் பயன்படும்.

6. நுண்ணலைகள்(Micro Waves)
    இதன் மூலம் நுண் அலை சூளைகளின் செயற்பாடு நடைபெறும். நிறமாலை     முறைகள் மூலம் நடைபெறும் பகுத்தாய்வு செயற்பாடுகளின் போது    
    பயன்படும்.

7. ரேடியோ அலைகள் (Radio Waves)
    தொலைக்காட்சி, ரேடியோ ஊடகங்களின் மூலம் தொடர்பாட உதவும்.

No comments:

Post a Comment