கேலுசாக்கின் விதியை ஆய்வுசாலையில் வாய்ப்புப் பார்த்தல்
Eg:- H2(g) , Cl2(g) தொகுதி
Eg:- H2(g) , Cl2(g) தொகுதி
1. கொதிகுழாயினுள் நீரை முற்றாக நிரப்பி அளவுச்சாடியினுள் ஊற்றுவதன்
மூலம் அதன் கனவளவு அறியப்படும். பின்பு குழாயின் அரைவாசியளவில்
நீரை எடுத்து இறப்பர் வளையத்தினால் அடையாளமிடப்படும்.
2. இக்குழாய்களை நீரைக்கொண்ட தாளி ஒன்றினுள் நீரைக்கொண்ட
நிலையில் தலைகீழாகப் பொருத்தப்படும்.
3. குழாயின் அரைவாசிக்கு H2(g) , Cl2(g) வாயுக்கள் நீரின் கீழ் முகப்
இடப்பெயர்ச்சியின் மூலம் சேகரிக்கப்படும
H2(g) ஐக் கொண்ட குழாயை Cl2(g) ஐக் கொண்ட குழாய்க்கு அண்மையாகக் கொண்டுவந்து குழாயின் வாய்கள் மட்டுமட்டாக பொருந்தத்தக்க வகையில் வைத்து Cl2(g) வாயுவைக் கொண்ட குழாயினுள் H2(g) செலுத்தப்படும். இதன்போது நீர்மட்டம் பாத்திரத்தின் நீர்மட்டம் வரை இறங்கும்.
இத்தொகுதியை பரவிய சூரிய ஒளியில் வைக்கும்போது நீர்மட்டம் குழாயினுள் படிப்படியாக உயர்ந்து குழாய் முழுவதும் நீரால் நிரம்பும்.
இப்பரிசோதனையில் ஏற்படுத்தக்கூடிய வழுக்கள் அதன் முடிவுகளைப் பாதிக்கும்.
1. இப்பரிசோதனை பல தடவைகள் செய்யப்படல் வேண்டும்.
2. Cl2(g) நீரில் கரைவதைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படல் வேண்டும்.Cl2(g) ஐக் கொண்ட குழாயினுள் H2(g) ஐச்
செலுத்துதல் வேண்டும்.தாளியினுள் உள்ள நீரினுள் ஏற்கனவே Cl2(g)
கரைக்கப்படுதல் வேண்டும்.
3. இப்பரிசோதனை நேரடிச் சூரிய ஒளியில் நடைபெறின் வெடிப்பு நிகழும்
எனவே பரவிய சூரிய ஒளியில் செய்யப்படல் வேண்டும்.
4. H2(g) , Cl2(g) ஐக் குழாயினுள் செலுத்துகையில் வெளியில் வாயுக்குமிழிகள்
செல்லாது விடப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment