Sunday, July 7, 2013

அலைகள் - Waves

இசைக்கருவிகளை இசைவாக்கல்

இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்யும் போது அது சரியான முறையில் இச்சுரங்களைத் தரக்கூடிய விதத்தில் அவ்விசைக்கருவிகளை ஒழுங்க மைத்தல் “இசைக்கருவிகளை இசைவாக்கல்” என அழைக்கப்படும்.
இது இசைக்கருவிகளுக்குக் இசைக்கருவி வேறுபடும். 

இழையின் சுருதி தங்கியுள்ள காரணிகள்
1. இழையின் குறுக்குவெட்டுப்பரப்பு (இழையின் தடிப்பு)
2. அதிர்வடையும் பகுதியின் நீளம்
3. இழையின் இழுவை

இழையின் குறுக்குவெட்டுப்பரப்பு (இழையின் தடிப்பு)
இழையின் தடிப்பு(விட்டம்) அதிகரிக்கும் போது சுருதி குறைவடையும். ஆனால் இழையின் தடிப்பு குறைவடையும் போது சுருதி அதிகரிக்கும்.

இழையின் இழுவை
இழையின் இழுவை அதிகரிக்கும் போது சுருதி அதிகரிக்கும். ஆனால் இழையின் இழுவை குறைவடையும் போது சுருதி குறைவடையும்.

அதிர்வடையும் பகுதியின் நீளம்
இழையின் நீளம் அதிகரிக்கும் போது சுருதி குறைவடையும். ஆனால் இழையின் நீளம் குறைவடையும் போது சுருதி அதிகரிக்கும்.
Note:- 
1. ரபானின் மென்சவ்வு இசைப்பதற்கு முன்னர் அனலில் வாட்டப்பட்டு பின் 
   உலர்ந்து சுருங்கும் இதனால் இம்மென்சவ்வின் இழுவை அதிகரிப்பதனால் 
   அதன் சுருதி அதிகரிக்கும்.
2. தவில் போன்ற கருவிகளில் வார்களை இறுக்குவதன் மூலம் 
   அம்மென்சவ்வுகளின் இழுவை அதிகரிக்கும். ஆனால் இங்கு 
   அகத்தில்,புறத்தில் என இரு வௌ;வேறு தடிப்புடைய மென்சவ்வுகள் 
   பயன்படுத்தப்படுவதனால், அவை அதிரும் போது ஒரே நேரத்தில் இரண்டு 
   வகையான இசைச்சுரங்களை எழுப்பமுடியும்.

3. உடுக்கு அடிக்கும் போது அதன் இழுவை மாற்றியமைக்கப்பட்டு சுருதி 
    கூட்டி, குறைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment