Thursday, June 20, 2013

அலைகள் - Waves

புவியதிர்வு அலைகள்
புவியின் உட்பகுதியில் ஏற்படும் வெடிப்புக்கள் அல்லது புவியோடு களுக்கிடையில் ஏற்படும் மோதுகைகள் காரணமாக புவியதிர்வு ஏற்படுகின்றது. இதன்போது பாரிய அளவில் சக்தி வெளிவிடப்படும் இதன் காரணமாக தோன்றும் புவியதிர்வு அலைகள் புவிமேற்பரப்பை வேகமாக வந்தடைவதால் நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இது புவிமேற்பரப்பின் தரை சமுத்திரங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
புவிநடுக்கம் தோன்றும் இடம் குவியம் எனப்படும்.மேன்மையத்திலிருந்து அலைகள் இரு விதங்களில் தோன்றும். அவை மேற்பரப்பு அலைகள் உடலக அலைகள் என இரண்டாகப் பிரிக்கப்படும். 
மேற்பரப்பு அலைகள் புவியின் மேற்பரப்பு வழியே சென்று பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் இவை குறுக்கலைகளாகும்.

உடலக அலைகள் இரு வகைப்படும்.
1. முதலான அலைகள்(Primary Waves)
2. துணையான அலைகள்(Secondary Waves)

முதலான அலைகள்(Primary Waves)
மிக வேகமாகச் செல்லும் நெட்டாங்கு அலைகளாகும். 

துணையான அலைகள்(Secondary Waves)
ஓரளவு வேகம் குறைந்த குறுக்கலைகளாகும். 

புவி நடுக்கமானி மூலம் இவ் அலைகளின் வருகையை எதிர்வு கூறமுடியும்.

No comments:

Post a Comment