Tuesday, June 25, 2013

கர்நாடக சங்கீதம் - நாதம்

இசைக் கலைக்கு மூலாதாரமாய் விளங்குவது நாதமாகும். நாதம், ஒலி, சப்தம் ஆகிய பதங்கள் ஒன்றிற்கொன்று பொருள் நிலையில் வேறுபாடுடையன வாகும்.
ஓலிக்கு காரணமாய் இருக்கும் துடிப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்படுமானால் அத்துடிப்புக்கள் செவிக்கு இனிமையைக் கொடுக்கும். இவ்வினிமையான ஒலிகளையே நாதமென்பர். ஓலி அலைகள் ஒழுங்கீனமாக எழுமானால் அவை வெறும் “சப்தம்” எனப்படும். ஓலி அலைகள் ஒழுங்குபடுத்தப்படுவதனாலேயே இசை பிறக்கின்றது. எனக் கூறின் அது மிகையாகாது. நமது வாழ்க்கையில் பழக்கவழக்கங்களும், கருமங்களும் ஒழுங்குபடுத்தமானால்வாழ்க்கையே சிறப்படையும். இவ்வாறே ஒலித்துடிப்பக்கள் ஒழுங்குபடுத்தப்படுமானால் அது வெறும் ஒலியாகவோ, சப்தமாகவோ இராது. நாதமெனும் பெயரைப் பெற்று விடும்.

இந்த நாதம் ஆகநாதம், அனாக நாதம் என இரு வகைப்படுமென்பர். ஆகநாதம் சாதாரண மககளால் உணரக்கூடியதென்றும், அனாகநாதம் யோகிகளால் மட்டும் உணரக்கூடியது என்றும் நாத ஆராய்வினர் கூறி வைத்தனர்.

No comments:

Post a Comment