Saturday, June 29, 2013

முகாமைத்துவத்தின் படிநிலைகள்(Functions of Management)


இது பின்வரும் படிமுறைகளைக் கொண்டது.

1. திட்டமிடுதல்(Planning)
2. ஒழுங்கமைத்தல்(Organizing)
3. ஊழியரிடல்(Staffing)
4. நெறிப்படுத்தல்(Directing)
5. ஒருங்கிணைத்தல்(Co-ordinating)
6. கட்டப்பாடு செய்தல்(Controlling)

திட்டமிடலென்பது நிறுவனத்தின் குறிக்கோளைத் தீர்மானித்தலும் அக்குறிக் கோளையடைவதற்கான நிறுவனத்தின் செயற்பாடுகளை வகுத்தலுமாகும்.

ஒழுங்கமைத்தல் என்பது திட்டமிடப்பட்ட செயல்முறைகளை நடை முறைப்படுத்த பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்துப் வளங்களைக் கிடைக்கக் கூடியதாகச் செய்தலுமாகும்.

நெறிப்படுத்தல் என்பது பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புக்களைத் திறமையாகச் செய்வதற்கும் வளங்களைத் திறமையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தவும் வேண்டிய அறிவுரைகளையும் பயிற்சியையும் வழங்குவதாகும்.

ஒருங்கிணைத்தலென்பது நிறுவனத்தின் பல்வேறு பகுதிகள் அல்லது பிரிவுகளை ஒருங்கிணைத்து இறுதிக் குறிக்கோளையடையும் விதத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயற்படத் தேவையான தொடர்புகளைச் செய்வதோடு பணியாளரின் உறவுமுறையைப் பேணுவதுமாகும்.

கட்டுப்படுத்தல் என்பது செயல்முறைகளைக் கண்காணித்தல், பரீட்சித்துப் பார்த்தல், முடிவுகளை ஆராய்ச்சி  செய்தல், திருத்தங்களைச் செய்தல் என்பனவாகும்.

No comments:

Post a Comment