Tuesday, June 11, 2013

வணிக வங்கிகளின் கடனாக்கம் அல்லது பணவாக்கம்

வணிகவங்கிகள் பணத்தை வெளியீடு செய்ய முடியாதவிடினும் அவை பணவாக்கம் செய்வதன் மூலம் பண நிரம்பலில் செல்வாக்குச் செலுத்துகின்றன். ஓர் வங்கி கடன்களை வழங்குவதனூடாக பொது மக்கள் பெயரிலான கேள்வி வைப்புக்களை அதிகரிப்பதன் மூலம் பணவாக்கத்தை செய்கின்றன. வங்கிகளின் ஒதுக்க வீதத்தின் அளவைப் பொறுத்து பணவாக்க சக்தியும் நிர்ணயிக்கப்படும். ஒதுக்கு வீதம் குறைவாக இருந்தால் பண ஆக்க சக்தி அதிகமாகவும் ஒதுக்கு வீதங்கள் உயர்வாக இருந்தால் பணவாக்க சக்தி குறைவாகவும் காணப்படும்.
ஆயினும் பொது மக்கள் வங்கிப் பழக்கவழக்கம் உடையவர்களாகவும் ,காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்கள்  பிரபல்யம் பெற்று இருக்கும் ஒரு நாட்டில் அதிக வணிக வங்கிகள் செயற்படும் போது பணவாக்கம் நிகழ முடியும். இதற்கு மாறான நிலைமைகள் காணப்படுமாயின் பணவாக்கம் ஏற்படவோ அதன்மூலம் பணநிரம்பல் ஏற்படவோ  பணவீக்க நிலை தோன்றவோ வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment