Tuesday, June 11, 2013

கர்நாடக சங்கீதம் - ஒலி

நம் வாழ்வில் அன்றாடம் பல வகையான ஒலிகளைக் கேட்கின்றோம். அவற்றுள் சில கேட்பதற்கு இனிமையாகவும், சில கேட்பதற்கு இனிமையற்றதாகவும் உள்ளன. ஒலியின் நயம், நயமற்ற தன்மை, ஒலி எழுங்காரணம், அவை பரவும் வகை ஆகியவற்றைச் சிறிது ஆராய்வோம்.
நாம் வானவெளியில் விடும் பட்டடங்கள் சிலவற்றிற்கு விண்பூட்டுகின்றோம். விண்ணுடன் பொருத்தப்பட்டுள்ள அதன் ஒரு பகுதியாகிய நாரிலே காற்றினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அவ்வதிர்வுகளே ஒலிக்குக் காரணமாய் அமைகின்றன. பட்டத்தை இறக்கிக் காற்று வீசாத இடத்தில் வைப்போமானால் விண்ணிலிருந்து ஒலி உண்டாகாமையையும் கான்கின்றோம். விண்ணில் காற்று உரமாகப் பிடிக்க வைத்து அதில் எழும் துடிப்புக்களே சப்தத்திற்கு காரணம் என்பதையும், துடிப்புக்களை கைவிரல்களினால் தடுத்து நிறுத்தியவிடத்து சப்தம் எழாதிருத்தலையும் நாம் கண்டுணரலாம்.
துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட மணியினை அடித்தததும் அதிலிருந்து எழும் அதிர்வுகளே ஒலிக்கு மூலாதாரம் என்பதனை நாம் அனுபவத்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment