Wednesday, February 27, 2013

சடப்பொருட்களின் கட்டமைப்பு ,பருமன் தொடர்பான விஞ்ஞான ரீதியான கருத்துக்களை ஆராய்தல்

அணு(Atom)
இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடக்கூடிய மிகச்சிறிய துணிக்கை அணு எனப்படும்.

சடப்பொருட்கள் (Matters)
திணிவைக்கொண்டதும், இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடியதுமான பொருட்கள் சடப் பொருட்கள் எனப்படும்.

சடப்பொருட்கள் சூழலில் பின்வரும் மூவகை நிலைகளில் காணப்படுகின்றன.
1. திண்மம் (Solid)
2. திரவம் (Liquid)
3. வாயு (Gas)
இச்சடப்பொருட்களின் மூவகை நிலைகளும் சக்தியை ஏற்றோ,இழந்தோ ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றமடையக்கூடியன.

சடப்பொருட்களின் மூவகை நிலைகளான திண்மம், திரவம், வாயு ஆகியவற்றின் மின் கடத்துதிறன்/மின்தன்மை போன்றவை இவ்வத்தியாயத்தில் ஆராயப்படும்.
சடப்பொருட்களை மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செல்லும்போது மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துணிக்கை அணு என கி.மு 400 ஆம் ஆண்டளவில் கிரேக்கத் தத்துவஞானியாகிய டிமோக்கிரிற்றஸ் கூறினார்.
இதன் பின்னர் வந்த ஜோன் தாற்றன் (John Doltan) என்பவர் இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார்.

தாற்றனின் அணுக்கொள்கை(Doltan’s Atomic Theory)
1. சடப்பொருளின் மேலும் பிரிக்கமுடியாத மிகச்சிறிய துணிக்கை
    அணுவாகும்.
2. அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் எல்லா இயல்புகளிலும்
    ஒத்தவை. ஆனால் வெவ்வேறு மூலகங்களின் இயல்புகள்
    ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டனவாகும்.
4. வேறுபட்ட மூலகங்களின் அணுக்கள் எளிய முழுஎண் விகிதத்தில்
    சேர்வதனால் சேர்வை உருவாகிறது.
அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பின்னர் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அக்கொள்கையின் குறைபாடுகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது. எனினும் இரசாயனவியலில் பெரும்புரட்சியை ஏற்படுத்த அவரது அணுக்கொள்கை வித்திட்டது.

திருத்தியமைக்கப்பட்ட தாற்றனின் அணுக்கொள்கை
1. சடப்பொருட்கள் மேலும் பிரிக்கமுடியாததெனக் கூறப்பட்ட போதிலும்  
    சடப்பொருட்கள் மேலும் பிரிபடக்கூடியது எனினும் அது இலத்திரன்,   
    புரோத்தன், நியூத்திரன் எனும் பிரதான அடிப்படைத்துணிக்கைகளால்  
   ஆக்கப்பட்டது என பரிசோதனைகள் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
2.அணுவைப் பிளக்கமுடியும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது
    உருவாக்கப்படும் பெருமளவு சக்தி ஆக்கபூர்வமான தொழிற்பாடுகளுக்குப்
    பயன்படுத்தப்படுகின்றது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் இல்புகளில் ஒத்தவையல்ல.
    Eg  :-   சமதானிகள்
4. வேறுபட்ட மூலகத்தின் இயல்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையல்ல.
    Eg  :-   சமபாரங்கள்

5.மூலக அணுக்கள் சேர்ந்து சேர்வைகளை உருவாக்கும்போது மூலக
   அணுக்களுக்கிடையிலான விகிதம் எளிய முழுவெண் விகிதத்தில் அமையும்
   என்பது சிறிய சேர்வைகளுக்குப் பொருத்தமானது. எனினும் பாரிய
   சேர்வைகள் கருதப்படும் போது இம் விதிமுறையானது மீறப்படுகின்றது.
சடப்பொருட்களின் மின்னியலுக்கான சான்றுகள்

இவை கீழ்வரும் மூன்று தலைப்புக்களின் கீழ் ஆராயப்படும்
1. திண்மங்களின் மின்தன்மை
2. திரவங்களின் மின்தன்மை
3. வாயுக்களின் மின்தன்மை

திண்மங்களின் மின்தன்மை
திண்ம சடப்பொருட்களின் மின்னுடனான கடத்துதிறன் பற்றி இங்கு ஆராயப்படும்.
திண்மங்களினூடான மின்கடத்தலுக்குக் காரணம் சுயாதீன இலத்திரன்கள் ஆகும். 
எனினும் மின்னோட்டத்தின் திசைக்கு எதிர்த்திசையில் இலத்திரன்களின் ஓட்டம் காணப்படும்.
திண்ம பதார்த்தங்கள் அவற்றில் அடங்கியிருக்கும் சுயாதீன இலத்திரன்களின் அடிப்படையில் பின்வரும் மூன்று வகையாகப் பிரிக்கப்படும்
கடத்திகள்
மின்னோட்டத்தை தம்மூடாக செல்ல அனுமதிப்பவை கடத்திகள் எனப்படும்.
Eg  :-  உலோகங்கள் (Cu, Zn, Ag)
உலோகங்களினூடான மின்கடத்துதிறனை “கல்வானி” எனும் விஞ்ஞானி கூறினார்.

குறைகடத்திகள்
மின்னோட்டத்தை தம்மூடாக குறைந்த அளவில் செல்ல அனுமதிப்பவை குறைகடத்திகள் எனப்படும்.
Eg  :-  (C பென்சில் கரி)/ காரியம்

காவலிகள்
மின்னோட்டத்தை தம்மூடாக செல்ல அனுமதிக்காத பதார்த்தங்கள் காவலிகள் எனப்படும்.
Eg  :-  இறப்பர், பிளாஸ்ரிக், உலர்ந்தமரம்.
காவலிகள் மின்னோட்டத்தைக் காவிச்செல்லாத போதிலும் அவற்றில் மின்னேற்றங்கள் தூண்டப்படமுடியும் அவை “நிலைமின்னேற்றங்கள்” என அழைக்கப்படும்.
உராய்வினால் சடப்பொருட்களில் நிலைமின்னேற்றங்கள் உருவாக்கப்பட முடியும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிலைமின்னேற்றங்கள் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்க மாட்டாதன.
Eg  :-
1.ஒரு ஏபனைற்றுக்கோலை பட்டுத்துணியினால் உரோஞ்சி சிறிய றெஜிபோம்/ கடதாசித்துண்டுகளின் மீது பிடிக்கும்போது அவை கவரப் படுவதை அவதானிக்கலாம். இதன்போது ஒவ்வாத நிலைமின்னேற்றங்கள் உருவாக்கப்பட்டமையே இக்கவர்ச்சிக்குக் காரணமாகும்.
2. இரு ஏபனைற்றுக் கோல்களை பட்டுத்துணியினால் உரோஞ்சி இரு கோல்களையும் அண்மையாகப்பிடிக்குப்போது அவை இரண்டும் ஒன்றை யொன்று தள்ளுவதை அவதானிக்கலாம். எனவே ஒத்த ஏற்றங்கள் ஒன்றை யொன்று தள்ளும்.
காவலிப்பதார்த்தங்களில் உருவாக்கப்படும் நிலைமின்னேற்றங்களை அளவிடுவதற்காக “பொன்னிலை மின்காட்டி” எனும் சாதனம் பயன்படுத்தப் படுகின்றது.

திரவங்களின் மின்தன்மை
புற மின்னோட்டத்தை வழங்கி ஒரு திரவ சடப்பொருளை வோறொரு பொருளாக மாற்றமுடிகின்றமை. (மின்பகுப்புப் பரிசோதனைகள்)
சடப்பொருளில் நிகழும் மாற்றங்களில் இருந்து மின்னைப்பிறப்பிக்கமுடியும்.
(எளிய மின்கலம்/ உலர்மின்கலம் போன்றவற்றில் நடைபெறும்.)
Eg  :-  மின்பகுப்புப் பரிசோதனை
காபன் மின்வாய்களைப் பயன்படுத்தி CuSO4 கரைசலை மின்பகுக்கும்போது கதோட்டில் செப்பு படிவதையும், CuSO4 கரைசலின் நிறம் நீக்கப்பட்டதையும், அனோட்டில் O2  வாயு வெளியேற்றப்பட்டதையும் அவதானிக்கலாம்.
Eg  :-  மின்கலங்கள்
Cu, Zn  மின்வாய்களை ஐதான  H2SO4  கரைசலினுள் அமிழ்த்தி ஒரு கல்வனோமானியுடன் கூடிய சுற்றினைப் பூர்த்தி செய்யும்போது கல்வனோ மானி திரும்பலைக்காட்டுவதை அவதானிக்கலாம்.

Note:- மின்பகுப்பு தொடர்பான பரிசோதனைகள் “மைக்கல் பரடே” எனும்  
           விஞ்ஞானி ஆல் மேற்கொள்ளப்பட்டது.

வாயுக்களின் மின்தன்மை
வாயுக்களினூடான மின்கடத்துதன்மை கண்டறியப்பட்டதன் விளைவாகவே உப அணுத்துணிக்கை கண்டுபிடிக்கப்பட்டன.
மின்னிறக்கக் குழாய் ஒன்றினுள் சாதாரண வளிமண்டல அமுக்கத்தில் (1atm), வாயுவை அடைத்து சாதாரண அழுத்தவேறுபாடடைப் பிரயோகித்தபோது வாயு மின்னைக் கடத்தவில்லை. (A மானியில் திரும்பல் எதுவும் ஏற்படவில்லை)

எனினும் பின்னர் வந்த “வில்லியம் குரூக்ஸ்” எனும் விஞ்ஞானி மின்னிறக்க் குழாயில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வாயுக்களின் மின்கடத்துதன்மையை ஆராய்ந்தார். 
இதனால் இக்குழாய் “குரூக்சின் குழாய்” (Crook’s Tube) எனவும் இப் பரிசோதனை “குரூக்சின் கதோட்டுக் கதிர்க் குழாய்ப் பரிசோதனை” எனவும் அழைக்கப்பட்டது.

குரூக்சின் கதோட்டுக் கதிர்க் குழாய்ப் பரிசோதனை
மின்னிறக்குழாயில் உள்ள வாயுவின் அமுக்கத்தை சாதாரண நிலையில் வைத்து உயர்ந்த அழுத்தவேறுபாட்டைப் (10000V) பிரயோகித்தபோது A மானியில் எவ்வித திரும்பலையும் காட்டவில்லை. பின்னர் வாயுவெளியகற்றும் பம்பி மூலம் வாயுவின் அமுக்கத்தை குறைத்தபோது (0.01mmHg) A மானியில் திரும்பல் ஏற்பட்டதுடன் கதோட்டிலிருந்து மெல்லியபச்சை நிறமான ஒளிர்வு தோன்றி மறைந்தததையும் Willam Crooks  அவதானித்தார். 
எனவே இக்கதிர்கள் “கதோட்டுக்கதிர்கள்”  (Cathode Rays) என அழைக்கப்பட்டன. கதோட்டுக்கதிர்க்குழாய்/ கதோட்டுக்கதிர்கள் என்பவற்றைக் கண்டறிந்த பெருமை Willam Crooks ஐயே சாரும்.
Note:-
1.வாயுக்கள் மிகக்குறைந்த அமுக்கத்திலும், கூடிய அழுத்தவேறுபாட்டிலும்
   மின்னைக் கடத்தும்.
2.மின்னிறக்குழாயில் வாயுவின் மின்கடத்தலுக்கு உயர்ந்த
  அழுத்தவேறுபாடும், குறைந்த அமுக்கமும் பயன்படுத்தப்படுகின்றமைக்கான
  காரணம்.
  உயர் அழுத்தத்தை பயன்படுத்தி தாழ்ந்த அமுக்கத்தில் வாயுவை இலகுவாக
  அயனாக்கி மின்னைக்கடத்துவதற்கு அதாவது அமுக்கம் குறையும்போது
  வாயுத்துணிக்கைகளின் எண்ணிக்கை குறைவதால் அவற்றின் சராசரிச்சக்தி
  கூட்டப்படும். அதாவது தாழ் அமுக்கத்தில் ஒவ்வொரு துணிக்கையும்
  கூடியளவு சக்தியைப்பெற்று அயனாக்கப்படும்.
3.மின்னிறக்கக் குழாயில் வாயுத்துணிக்கைகளின் மின்கடத்தலுக்குக்
   காரணமான துணிக்கை இலத்திரன் (Electron) என “ஸ்ரோணி” (Stony) கூறினார்.
4.“J.J.தொம்சனால்” இலத்திரன்கள் பரிசோதனை ரீதியாகக் கண்டு
   பிடிக்கப்படும் வரை ஒரு கருதுகோள் துணிக்கையாகவே இருந்துவந்தது.

உபஅணுத்துணிக்கைகளும் அவற்றின் கண்டுபிடிப்பும்
சடப்பொருட்களின் மிகச்சிறிய துணிக்கை அணு(Atom) என டிமோகிரற்றிஸ் கூறினார்.
இதன் பின்னர்வந்த 19ஆம் நுற்றாண்டு காலத்துக்குரிய டோல்ரனின் அணுக்கொள்கை “மேலும் பிரிக்கமுடியாத மிகச்சிறிய துணிக்கை அணுவெனக்” கூறினார்.
எனினும் பின்னர் வந்த விஞ்ஞானிகளினால் பரிசோதனைகளின் விளைவாக டோல்ரனின் அணுக்கொள்கை கைவிடப்பட்டு புதிய அணுக்கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
இக்கொள்கை அணுவானது பின்வரும் முக்கிய மூன்று அடிப்படைத்துணிக்கைகளினால் ஆக்கப்பட்டதெனக் கூறுகின்றது.

1. இலத்திரன் (Electron)
2. புரோத்திரன் (Proton)
3. நியூத்திரன் (Neutron)
இவை தவிர அணுவில் முக்கியத்துவம் குறைந்த அடிப்படைத் துணிக்கைகளும் காணப்படுகின்றன.
Eg  :- பொசித்திரன்கள், மீசேன்கள், ஐபெரன்கள்
Note:-
1.கதோட்டுக்கதிர்ப் பரிசோதனைமூலம் இலத்திரன்களைக் கண்டுபிடித்தவர்
   “J.J.தொம்சன்” ஆவார்.
2.இலத்திரனின் திணிவு ஐதரசன் அணுவின் திணிவின் 1/1840   மடங்காகும்.

புரோத்தன் (Prothan)(P1+1)
எதிரேற்றத்தைக் கொண்ட இலத்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அணு மின்நடுநிலையானதாகையால் இவ் மறையேற்றத்தை நடுநிலைப்படுத்தும் வகையில் நேரேற்றம் கொண்ட உபஅணுத்துணிக்கை காணப்படவேண்டும் என அனுமானிக்கப்பட்டதன் விளைவாகவே புரோத்தன்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஆனாலும் பலவிஞ்ஞானிகள் இதனை நிரூபிக்கமுடியாது சலிப்புற்றனர். எனினும் “கோல்ஸ்ரின்” (Goldstein) என்பவர். வலையுருவான கதோட்டைப் பயன்படுத்தி கதோட்டுக்கதிர்க்குழாய்ப் பரிசோதனையைச் செய்தபோது கதோட்டில் இருந்து அனோட்டு நோக்கி மெல்லிய பச்சை நிறமான ஒளிர்வு தோன்றிமறைந்ததையும் அதற்கு எதிர்ப்புறத்தே உள்ள கண்ணாடியில் செந்நிறஒளிர்வு தோன்றியதையும்   
அவதானித்து அவற்றை கால்வாய்க்கதிர்கள் (Channal Rays) என “கோல்ஸ்ரின்” பெயரிட்டார். இதன்போது கதோட்டுக்கதிர்களின் திசைக்கு எதிர்த்திசையில் செல்வதனாலும் நேர் ஏற்றத்தைக் கொண்டிருந்ததாலும் “நேர்க்கதிர்கள்” என அழைக்கப்பட்டது.
எனினும் இதனை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தி நேரேற்றம் கொண்ட புரோத்தன்களைக் கண்டுபிடித்த பெருமை “இரதபோர்ட்டை”(Rutherford) ஐச் சாரும்.
Note:-

1.இலத்திரனின் திணிவு புரோத்தன் அணுவின் திணிவின் 1/1840  மடங்காகும்.
2.புரோத்தனின் திணவு இலத்திரனின் திணிவை விட 1840 மடங்கு அதிகமாகும்.

நியூத்திரன்(Neutron)( n10)
நியூத்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டமைக்கான காரணங்கள் 
1.   பௌதீகமுறையாலும், இரசாயன முறையாலும் அணுத்திணிவுகள்   
      துணியப்பட்டபோது வேறுபாடுகள் இருந்ததை விஞ்ஞானிகள்  
      கண்டறிந்தனர். (இரசாயனத்திணிவு, பௌதீகத்திணிவிலும் கிட்டத்தட்ட
      இருமடங்காக இருந்தது) இதிலிருந்து அணுவினுடைய திணிவுக்குக்
      காரணமாகிய நடுநிலையான துணிக்கையொன்று கருவில் இருக்க
      வேண்டும் என எதிர்வு கூறப்பட்டது.
2.   புரோத்தனும், இலத்திரனும் ஒன்றை ஒன்று நடுநிலையாக்குவதால்  
     கருவில் இருக்கும் மற்றைய துணிக்கை நடுநிலையானது எனக்
     கருதப்பட்டது.


நியூத்திரன்களின் கண்டுபிடிப்பு தாமதமானமைக்கான காரணம்
அது அணுவில் ஏற்றமற்ற நடுநிலையான துணிக்கையாக் காணப்பட்டமை

சட்விக்கின் பரிசோதனை
கதிர்த்தொழிற்பாட்டு மூலகத்தில் இருந்து வெளிவரும் நேர்ஏற்றம் கொண்ட α கதிர் கற்றைகளை Be /B தகட்டின் மீது மோதச் செய்கையில் ஏற்றமற்ற ஆனால் திணிவைக் கொண்ட ஒருவகைக் கதிர்த்துணிக்கைகள் வெளியேறுவது அவதானிக்கப்பட்டது. இவை நியூத்திரன்கள் என அழைக்கப்படும்.
இப்பரிசோதனையைச் செய்து நியூத்திரனைக் கண்டுபிடித்தவர் “சட்விக்” (Chadwick) ஆவார். இது கதிர்த்தொழிற்பாட்டுப் பரிசோதனையின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அணுக்கரு மாதிரியுருக்கள்

அணுவினுடைய அடிப்படைத்துணிக்கைகளான இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ஆகிவை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இத்துணிக்கைகள் அணுக்களில் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதைக் குறித்துக்காட்டுவனவாகவே அணுக்கரு மாதிரியுருக்கள் அமைந்தன.

தொம்சனின் பிளம்புடிங் மாதிரியுரு (Plum Pudding Model of Atom)


J.J.தொம்சன் என்பவரினால் நேரேற்றமுடைய கோளமொன்றினுள் எதிரேற்றங்கள் அமிழ்ந்திருக்கும் போது நடுநிலையான அணு தோன்றுகின்றது எனக் கூறினார்.

இவ்வமைப்பானது முந்திரி வத்தலைக் கொண்ட “புடிங்” போன்றது (Plum Pudding Model of  Atom) என வர்ணித்தார். இம்முடிவுகள் பெரும்பாலும் கதோட்டுக்கதிர்க் குழாய்ப் பரிசோதனையில் இருந்து பெறப்பட்டதாகும். எனினும் இது பரிசோதனை ரீதியாக நிருபிக்கப்படவில்லை.


இரதபோர்ட்டின் அணுக்கரு மாதிரியுரு
அணுவுக்கான ஏற்கத்தக்க அமைப்பு மாதிரி ஒன்றை “இரதபோர்ட்” (Rutherford) எனும் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

இரதபோர்ட் இம்மாதிரி அமைப்பை வரைவதற்கான “α கதிர் சிதறல் பரிசோதனை” அவரது மாணவர்களான “கைகர்” (Geiger), “மாஸ்டன்” (Masden) எனும் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.

Rutherford இன் α கதிர் சிதறல் பரிசோதனை
மெல்லிய Au தகடு ஒன்றின்மீது நேர்ஏற்றம் கொண்ட α கதிர்க்கற்றையை மோதச் செய்து அதனைச்சுற்றிவர வைக்கப்பட்ட ZnS திரையில் ஏற்படும் புளொரொளிர்வுகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டது.


பரிசோதனையின் அவதானங்கள்
1.அனேகமான கதிர்கள் விலகல் இன்றி நேரே சென்றன. (பின்புறமுள்ள ZnS
   திரையில் கூடியளவு புளொரொளிர்வுகள் தோன்றின.)
2.சிறிய பகுதிக்கதிர்கள் (1/8,000)  சிறிய கோணத்தினூடாக விலகலடைந்து
   சென்றது.
3.மிகவும் சிறிய பகுதிக்கதிர்கள் (1/20,000)  முற்றாகத் தெறிப்படைந்தன.


Rutherford  இன் α கதிர் சிதறல் பரிசோதனையில் இருந்து பெறும் முடிவுகள்
1.அனேகமான கதிர்கள் ஊடுருவிச் செல்வதனால் அணுவின் பெரும்பகுதி
   வெற்றிடமாகும்.
2.சில கதிர்கள் குறித்த கோணத்தில் திரும்புவதனால் அணுவில் நேர்ஏற்றம்
  கொண்ட, திணிவு அடர்ந்த சிறிய பகுதி காணப்படுகிறது. இது கருவெனக்
  கொள்ளப்படலாம்.
3.மிகச்சில கதிர்கள் பின்னோக்கித் திரும்புகிறது. அதாவது கருவில்
  நேரடியாகப்படும் கதிர்களே பின்னோக்கித் திரும்புகிறது.

Rutherford இன் அணுமாதிரியுருக் கொள்கை
1.அணுவானது நேரேற்றம்கொண்ட கருவெனும் பகுதியை மத்தியிலே
   கொண்டுள்ளது.
2.அணுவின் திணிவு முழுவதும் கருவிலே குவிந்துள்ளது.
3.அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாகும்.
4.அணு நடுநிலையானதாகையால் கருவில் உள்ள நேரேற்றத்திற்குச் சமமான
   இலத்திரன்கள் வெற்றிடத்தில் காணப்படுகின்றது.
5.கருவில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலேயே இலத்திரன்கள் உள்ளன. இவை
  கருவைச்சுற்றி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் இவரின்
  அணுக்கரு மாதிரியுரு ஞாயிற்றுத்தொகுதிக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டது.


நீல்போரின் அணுக்கரு மாதிரியுரு
அணுநிறமாலைத்தரவுகளையும் சக்திச்சொட்டுக் கொள்கைகளையும் பயன்படுத்தி அணுமாதிரியுருவைத் தெளிவுபடுத்தினார்.
1.அணு நேர்ஏற்றம் கொண்ட கருவை மத்தியிலே கொண்டுள்ளது.
2.அணுவின் திணிவு முழுவதும கருவிலே குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரு  
   ஓய்வில் காணப்படும்.
3.கருவைச்சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் இலத்திரன்கள் 
  இயங்குகிறது.
4.ஒவ்வொரு பாதையும் (ஓடும்) தனக்கே உரித்தான சக்திக் கணியத்தைக் 
  கொண்டுள்ளன.
5.ஒரு ஓட்டில் சுழலும் இலத்திரன்கள் சக்தியை ஏற்பதோ or இழப்பதோ   
  இல்லை. 
6.ஓடுகளுக்கிடையில் இலத்திரன் பரிமாற்றப்படும் போது சக்தி ஏற்கப்படலாம்  
   or இழக்கப்படலாம்.
7.நீல்போரின் மாதிரியுரு டிபுரோக்லி, ஹயிசன் பாக், சுருடின்கர் ஆகியோரால் 
  மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது கருவைச்சுற்றி இலத்திரன்கள் மிக  
  வேகமாகச் சுற்றுவதனால் அவை இருக்கும் இடத்தை இலத்திரன் முகில் 
  மூலம் காட்டலாம் எனவும் கூறினார்கள்.



No comments:

Post a Comment