Thursday, October 10, 2013

நியூத்திரன்

 (Neuthron)( n10)

நியூத்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டமைக்கான காரணங்கள் 
1. பௌதீகமுறையாலும், இரசாயன முறையாலும் அணுத்திணிவுகள் 
    துணியப்பட்டபோது வேறுபாடுகள் இருந்ததை விஞ்ஞானிகள் 
    கண்டறிந்தனர். (இரசாயனத்திணிவு, பௌதீகத்திணிவிலும் கிட்டத்தட்ட 
    இருமடங்காக இருந்தது) இதிலிருந்து அணுவினுடைய திணிவுக்குக் 
    காரணமாகிய நடுநிலையான துணிக்கையொன்று கருவில் 
    இருக்கவேண்டும் என எதிர்வு கூறப்பட்டது.
2. புரோத்தனும், இலத்திரனும் ஒன்றை ஒன்று நடுநிலையாக்குவதால் 
    கருவில் இருக்கும் மற்றைய துணிக்கை நடுநிலையானது 
    எனக்கருதப்பட்டது.

நியூத்திரன்களின் கண்டுபிடிப்பு தாமதமானமைக்கான காரணம்
அது அணுவில் ஏற்றமற்ற நடுநிலையான துணிக்கையாக் காணப்பட்டமை.

சட்விக்கின் பரிசோதனை
கதிர்த்தொழிற்பாட்டு மூலகத்தில் இருந்து வெளிவரும் நேர்ஏற்றம் கொண்ட α கதிர் கற்றைகளை Be /B  தகட்டின் மீது மோதச் செய்கையில் ஏற்றமற்ற ஆனால் திணிவைக் கொண்ட ஒருவகைக் கதிர்த்துணிக்கைகள் வெளியேறுவது அவதானிக்கப்பட்டது. இவை நியூத்திரன்கள் என அழைக்க ப்படும்.
இப்பரிசோதனையைச் செய்து நியூத்திரனைக் கண்டுபிடித்தவர் “சட்விக்” (Chadwick) ஆவார். இது கதிர்த்தொழிற்பாட்டுப் பரிசோதனையின்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
நியூத்திரன்களின் இயல்புகள்
1. ஏற்றமற்றவை
2. மின், காந்த மண்டலங்களில் திரும்பலைக் காட்டுவதில்லை.
3. புரோத்தன்களை விடப் பாரம் கூடியவை ஆனால் புரோத்தன்களை விட 
   வேகம் குறைந்தவை.

நியூத்திரன்கள் தொடர்பான அளவுப்பெறுமானங்கள்.
1. நியூத்திரனின் ஏற்றம் (Charge of Nuethron)
    ஏற்றமற்றவை

2. நியூத்திரனின் திணிவு (Mass of Nuethron)
    நியூத்திரன் ஒன்றினது திணிவு அண்ணளவாக ஐதரசன் அணுவொன்றின்  
    திணிவுக்குச் சமமானதாகும். 
3. நியூத்திரன்களின் ஏற்றம்/திணிவு (e/m) விகிதம்
    கிடையாது

4. நியூத்திரன்களின் பருமன்/ ஆரை/ விட்டவரிசை 
    10-13 cm or 10-15 m ஆகும்.

No comments:

Post a Comment