கி.மு 6 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் யாஸகர் என்பவர் தெய்வங்களை பின்வருமாறு வகைப்படுத்தினார்.
இயற்கைத் தெய்வங்கள் - மரம், செடி, கொடி, காற்று, தீ, ஆகாயம், மலைகள், நிலம் போன்றன தெய்வீக நிலைப்படுத்தப்பட்டு வழிபட்ட நிலை காணப்பட்டது.
உலக அடிப்படையிலான பகுப்பு(பல தெய்வம்)
1. விண்ணுலகத் தெய்வம்(திவ்விய லோகம்) - விஷ்ணு, ஆதித்தன், உசை,
அக்கினி, வருணன், சூரியன், மித்திரன், பூசன், தியெவ் முதலான 11
தெய்வங்கள்
2. இடையுலக தெய்வங்கள்(அஸ்திரிஸ்தானம்) மத்திய லோகம் - இந்திரன்,
உருத்திரன், வாயு, பர்ஜெயன், அப்பு, மதரிஸ்தன் முதலான 11 தெய்வங்கள்
3. மண்ணுலக தெய்வங்கள்(பிருதி விஸ்தானம்)- அக்கினி, பிருதி, சோமன்,
பிரகஸ்பதி, கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, கோதாவாரி முதலான 11
தெய்வங்கள்
எனவே இவ்வாறு உலக தெய்வங்கள் ஆண், பெண் பால் அடிப்படையில் 33 கடவுள் கொள்கை வழிபாடு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment