Thursday, September 12, 2013

இன்ரனெற் - Internet

இன்ரனெற் - Internet அல்லது இணையம்
இது ஒரு WAN (Wide Area Network) இணைப்பாகும். ஆனால் இதில் ஆயிரக் கணக்கான கணணிகள் இணைக்கப்பட்டிருப்பதுடன் உலக மட்டத்தில் பரந்துபட்ட இணைப்பாகும்.

இன்ரனெற் இணைப்பு தொடர்பை ஏற்படுத்த அவசியமானவை
1. வன்பகுதி(Hardware)
2. மென்பகுதி(Software)
3. மொடம்(Modem)
4. தொலைபேசி இணைப்பு

இன்ரனெற்றினால் வழங்கப்படும் சேவைகள்
1. E - mail
2. E - Money
3. E - Commerce
4. World Wide Web
இன்றானெற்(Intranet)
உள்ளகத் தொடர்பாடல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கணணி வலையமைப்பு இவ்வாறு அழைக்கப்படும். இது இன்ரனெற் உடனும் இணைக்கப்படலாம்.

இலத்திரனியல் தபால்(E-mail)
கணணி வலையமைப்பு மூலமாக ஒரு கணணில் இருந்து மற்றொரு கணணிக்கு கடிதம் அனுப்புதல் இலத்திரனியல் தபால் எனப்படும். செலவு மிக மலிவானதாகும்.

World Wide Web(WWW)
உலகிலுள்ள நிறுவனங்களால் அமைக்கப்பட்ட இணையத்தளம். இதில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் விரும்பியவர்களால் ஐவெநசநெவ மூலம் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment