Tuesday, August 27, 2013

இரசாயனக்கணித்தல்கள்

தாற்றனின் அணுக்கொள்கை(Doltan’s Atomic Theory)
1. சடப்பொருளின் மேலும் பிரிக்கமுடியாத மிகச்சிறிய துணிக்கை 
    அணுவாகும்.
2. அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் எல்லா இயல்புகளிலும் ஒத்தவை.    ஆனால் வெவ்வேறு மூலகங்களின் இயல்புகள் ஒன்றுக்கொன்று 
   முற்றிலும் வேறுபட்டனவாகும்.
4. வேறுபட்ட மூலகங்களின் அணுக்கள் எளிய முழுஎண் விகிதத்தில்    
    சேர்வதனால் சேர்வை உருவாகிறது. 
அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பின்னர் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அக்கொள்கையின் குறைபாடுகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது. எனினும் இரசாயனவியலில் பெரும்புரட்சியை ஏற்படுத்த அவரது அணுக்கொள்கை வித்திட்டது.
திருத்தியமைக்கப்பட்ட தாற்றனின் அணுக்கொள்கை
1. சடப்பொருட்கள் மேலும் பிரிக்கமுடியாததெனக் கூறப்பட்ட போதிலும் 
    சடப்பொருட்கள் மேலும் பிரிபடக்கூடியது எனினும் அது இலத்திரன், 
    புரோத்தன், நியூத்திரன் எனும் பிரதான அடிப்படைத்துணிக்கைகளால் 
   ஆக்கப்பட்டது என பரிசோதனைகள் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
2. அணுவைப் பிளக்கமுடியும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது 
    உருவாக்கப்படும் பெருமளவு சக்தி ஆக்கபூர்வமான தொழிற்பாடுகளுக்குப் 
    பயன்படுத்தப்படுகின்றது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் இல்புகளில் ஒத்தவையல்ல.
    Eg:- சமதானிகள்
4. வேறுபட்ட மூலகத்தின் இயல்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையல்ல.
    Eg:- சமபாரங்கள்
5. மூலக அணுக்கள் சேர்ந்து சேர்வைகளை உருவாக்கும்போது மூலக 
   அணுக்களுக்கிடையிலான விகிதம் எளிய முழுவெண் விகிதத்தில் அமையும்     என்பது சிறிய சேர்வைகளுக்குப் பொருத்தமானது. எனினும் பாரிய 
   சேர்வைகள் கருதப்படும் போது இம் விதிமுறையானது மீறப்படுகின்றது.
Note:-  எனவே இரசாயன சேர்க்கை விதிகளான திணிவுக்காப்பு விதி, மாறா அமைப்பு விதி, பல்விகிதசம விதி, இதரவிதரசம விதி என்பனவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment