வந்தர்வாலின் கவர்ச்சி(Vander Val bond)
முனைவாக்கம் அற்ற மூலக்கூறுகள் கொண்ட பதார்த்தங்களிலும் அயல் மூலக்கூறுகளுக்கிடையில் மிக நலிவான கவர்ச்சி விசை காணப்படும். இதுவே வந்தர்வாலின் கவர்ச்சி விசை என அழைக்கப்படும்.
இக்கவர்ச்சி விசை ஏற்படுவதற்கான காரணம்
மூலக்கூறு ஒன்றின் நேரேற்ற மையம் நிலையாக இருக்க மறை ஏற்றத் துணிக்கைகள் இயக்க நிலையில் இருப்பது ஆகும். இதனால் ஒரு தற்காலிக முனைவாக்கம் ஏற்படுகிறது. அதாவது முனைவாக்கம் அற்றவை என கருதப்படும். மூலக்கூறிலும் ஒரு தற்காலிக முனைவாக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அயல் மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும். கவர்ச்சி வந்தர்வாலின் பிணைப்பாகும்.
Eg :- H2, Cl2, BCl3,
CH4, CCl4, CO2 போன்ற முனைவாக்கமற்ற பதார்த்தங்களில் அயல் மூலக்கூறுகளுக்கிடையில் இருப்பது வந்தர்வாலின் கவர்ச்சி விசை யினால் ஏற்படும் பிணைப்பாகும்.
மூலக்கூற்றுப்பருமன் அதிகரிக்க வந்தர்வாலின் கவர்ச்சி அதிகரிக்கும்.
No comments:
Post a Comment