குறுக்கு அலைகள்/ அகலாங்கு அலைகள்
அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக அவ்வூடகத்தின் துணிக்கைகள் அதிருமானால் அவ்வலை குறுக்கலை எனப்படும்.
Eg:- 1. அமைதியான நீர்ப்பரப்பில் சிறு கல்லினை இடும்போது அங்கு ஏற்படும்
குழப்பங்கள்.
2. ஒரு முனையில் நிலையாகக் கட்டிய சிலிங்கியின் மறுமுனையை
அதன் அச்சுக்கு செங்குத்தாக மேல்கீழாக அசைக்கும்போது அவற்றில்
தோன்றும் அலை.
3. ஒளி அலை
இங்கு கல் ஒன்றை நீர்ப்பரப்பில் இடும்போது கல் ஏற்படுத்தும் அமுக்கம் காரணமாக அதன் மேற்பரப்பு கிழிறங்கி ஒரு தாழியை உருவாக்கும். அதன் மறுதாக்கம் மற்றும் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை ஆகியவற்றால் தாழியைச் சூழ உள்ள நீர் மேலெழுந்து இருபுறமும் முடிகளை உருவாக்கும். தற்போது தாழியிலும் முடியிலும் உள்ள நீரின் அமுக்கவேறுபாடு காரணமாக நீர்ப்பரப்பு தன் ஆரம்பநிலைக்கு வர எத்தணிப்பதால் முடியும் தாழியும் மாறி மாறித் தோன்றும்.
No comments:
Post a Comment